இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்

30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்

தேசேயிக்கு 15 வயது 29 வயதுடையவர்களை மட்டுமன்றி 30 வயதுக்கு மேற்பட்டவர்களை வரவேற்பதிலும் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளொம். இருந்தாலும் இளைஞர்கள் அதிகமதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், மிக எளிமையாக எங்கள் வரவேற்பு இருப்பதாலும், வயதானவர்கள் இதை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

வயதானவர்கள் தனியாகவோ, தப்பதியினராகவோ வரலாம். குழுக்களாக வரும் வயதானவர்களை எங்களால் வரவேற்க முடியாது. அவாகள் ஒரு வாரம் தங்கலாம் (ஞாயிறு முதல் ஞாயிறு வரை) அல்லது ஒரு சில நாட்களுக்கு, வாரத்தின் தொடக்கத்திலேயோ (ஞாயிறு வருதல்) அல்லது வாரத்தின் இறுதியில் வந்து (ஞாயிறு வெளியேறுதல்). இதற்கமேல் இங்கு தங்க இயலாது.

வருபவாகள் தேசேயில் முழு நாட்களும் தங்க வேண்டும், அன்றாடநடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும், தினமும் நடைபெறும் கூட்டு செபத்திலும், விவிலிய சிந்தனையிலும், குழு கலந்தரையாடலிலும் கலந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வர விரும்புவதுபற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்ததும் நீங்கள் வரலாமா அல்லத உங்கள் பயணத்தேதிகளை மாற்ற வேண்டுமா என்று சொல்லி நாங்கள் பதில் கடிதம் போடுவோம்.

தேதிகள்

பரிசுத்த வாரம், ஈஸ்டர் வாரம், விண்ணெற்பு வாரம். ஜூலை 15 க்கும் ஆகஸ்ட் முடிவக்கும் இடைப்பட்ட நாட்களில் வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். (அக்டோபர் 23லிருந்து நவம்பர் 6 வரை.) இளைஞர்களுக்கு தலைமை தாங்கி வரக்கூடிய வயதானவாகளை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்வொம். டிசம்பர் 25 முதல் ஜனவரி 6 வரை தேசேயில் யாரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

ஈஸ்டர் வாரத்திலும் பெந்தகோஸ்துக்கு பிறகு வரும் வாரத்திலும் நீங்கள் திங்கட்கிழமை வந்து திங்கட்கிழமை திரும்பலாம்.

குறைபாடுகள்

மிகவும் நெருக்கடியான வாரங்களில் தாமதமாக வரும் விண்ணப்பங்ளை நாங்கள் ஏற்க முடியாது. பயண ஏற்பாடுகள் செய்வதற்கு முன்பு ஏங்கள் பதிலுக்காக காத்திருங்கள.

30 வயதுக்கு மேற்பட்டவாகள் குழுவாக வந்தால் ஒரு குழுவில் 5 பேர்கள் தான் இருக்க வேண்டும்.. வயதானவாகள் தங்கள் குழந்தைகளுடன் குடும்ப கூட்டங்களுக்கு வருவதற்கும் இது பொருந்தும். 15-16 வயதுடையொருடன் வருபவாகளுடன் கூட 2 வயதானவர்கள் சேர்ந்து கொள்ளலாம். வெளி நாடுகளிலிருந்து வருபவாகளுக்கு இந்த நிபந்தனையில் சிறிது மாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறொம். பயணத்திற்கு எற்பாடு செய்யும்முன் இது பற்றி எங்களுடன் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். குழுவாக வருவது என்பது 15 முதல் 29 வயதக்கு உட்பட்டவாகள்தான் என்பதை உங்கள் தோழாகளிடம் தெளிவாக்கி விடுங்கள்.

- செல்ல பிராணிகளை இங்கு கொண்டு வருவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.

Printed from: http://www.taize.fr/ta_article11901.html - 28 January 2020
Copyright © 2020 - Ateliers et Presses de Taizé, Taizé Community, 71250 France