TAIZÉ

வாழ்க்கை அர்பண உறுதிபாடு

 
தயாரிப்பு காலம் முடிந்தவுடன், தெய்சே குழுமத்தில் இருக்கின்ற சகோதரர் தனது வாழ்நாள் அர்பணவ வார்த்தை பாடு கொடுக்கிறார். இந்த உறுதிபாட்டை விளக்கும் வரிகள் இங்கு தரப்படுகின்றது.

அன்புள்ள சகோதரரே நீங்கள் என்ன கேட்கின்றீர்கள்?

இறைவனின் இரக்கம் மற்றும் என் சகோதரர்களின் குழுமம்

தான் தொடங்கியதை இறைவன் உடம்பில் நிறைவு செய்வராக இறைவனின்; இரக்கத்தில் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்கள். உங்கள் தாழ்ச்சியான விசுவாசத்தில் ஆண்டவர் கிறிஸ்து உமக்கு உதவி செய்ய வருகிறார். உம்மோடு கூட உறுதி தருகிறார். உமக்கு அவர் தந்த வாக்குறதியை அவர் நிறைறேற்றுகிறார். கிறிஸ்துவுக்காக மற்றும் நற்செய்திக்காக எல்லாவற்றையும் துறந்த எவரும் - சகோதரர்கள், சகோதரிகள், அன்னையர்கள், குழந்தைகள் மற்றும் துன்புறுத்தப்படாலும் கூட, நூறுமடங்காக பெறாமல் இருந்ததில்லை என்பதும், நித்திய வாழ்வும் கிடைக்க பெறுபவார்கள் என்பதும் உண்மையிலும் உண்மை.

இந்த வழி மனித காரணங்களுக்கு முரணாக தெரியும். ஆனால் அபிரகாமை போல நீர் விசுவாசத்தோடு தொடர்ந்து செல்ல வேண்டும். கிறிஸ்துவுக்காக வாழ்வைத் தருபவர்கள் அதை கண்டடைவர் என்பது நித்திய நிச்சயம்.

இப்போதிலிருந்து கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் செல். நாளையை பற்றி கவலைப்பட வேண்டாம். முதலில் இறையரசையும் அதன் நிதியையும் தேடு. உம்மையே கொடு, சரணடை. பேதிய அளவில் அழுத்தமாக நன்றாக கலக்கி விலிம்புவரை நல்லருள் உம் மேல் பொழியப்படும். நீர் உறங்கினாலும், விழித்திருந்தாலும், இரவோ, பகலோ, எப்படி என உமக்கே தெரியாமல், இறைவன் மேல் மற்றும் உன் சகோதரர்கள் மேல் நம்பிக்கை வைக்கின்ற உம் ஆர்வம், நாளுக்கு நாள் வளரும்.

உன் முகத்தை கழுவு மற்றும் உம் தலைமேல் எண்ணைய் பூசு ஏனெனில் மறைவாய் இருக்கின்ற உம் தந்தைக்கு மட்டும் உன் இதயத்தில் இருப்பவை, மனதின் நோக்கங்கள் தெரியும். ஏளிமையாக இரு. இரக்கத்தின், சகோதர அன்பின் மகிழ்ச்சியில் மற்றும் முழுமையான மகிழ்ச்சியில் இரு.

விழிப்பாயிறு உன் சகோதரனை கடிந்துக் கொள்வதாக இருந்தால் அது உங்கள் இருவருக்குள்ளாகவே இருக்கட்டும். உம் அயலாரோடு அருகிருப்பவர்களோடு உறவை ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமாக இரும்.

உம்மை பற்றி திறந்த மனதுடன் இருங்கள், உமக்கு பொறுப்பானவராக ஒரு சகோதரர் இருக்கிறார், உமக்கு செவிமடுக்கிறார் என்பதை நினைவில் வைத்திரும். அவரை புரிந்துக் கொள் அதனால் அவர் தன் பணியை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார்.

ஆண்டவராகிய கிறிஸ்த்து உன் மேல் உள்ள கருணையாலும், தன் அன்பாலும், திருச்சபைக்குள், சகோதர அன்பின் அறிகுறியாக நீர் இருந்திட உம்மை தேர்ந்தெடுத்துள்ளார். உம் சகேதரர்களோடு, குழும உறவில் நீர் வாழவேண்டுமென்பது அவரது விருப்பம்.

எனவே திரும்பி பார்க்கமாட்னே; என்ற உறுதியுடனும், என்றும் நிறைந்த நன்றியின் மகிழ்ச்சியுடனும் தொடக்கத்தை சந்திக்க அச்சமின்றி எழுந்து, உம் ஆண்டவராகிய கிறிஸ்துவை புகழ்ந்திடு, பாடல் பாடி அவரை வாழ்த்துவாயாக.

ஏற்றுக்கொள்ளும் ஆண்டவராகிய கிறிஸ்துவே, நான் வாழ்வேன், எனது எதிர்பார்ப்புகளோ மகிழ்ச்சியின் ஆதாரமாகட்டும்.

JPEG - 11.3 kb

சகோதரரே, கிறிஸ்து உம்மை அழைக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும், அவருக்கு தான் இப்போது நீர் பதில் தரப்போகிறாய்.

கிறிஸ்துவின் அன்பிற்காக, உமது எல்லாவற்றோடும் முழுமையாக உம்மையே நீர் அர்ப்பணம் செய்கின்றீரா?

ஆம், நான் அர்ப்பணம் செய்கின்றேன்.

இதனால் உம் சகோதரர்களோடு தோழமையுறவில் நமது குழுமத்திற்குள் இறைவனிடமிருந்து வருகின்ற உமது அழைப்பை நிறைவேற்றுவீரா?

ஆம் நான் நிறைவேற்றுவேன்.

உமக்குள் சொத்துரிமை மற்றும் பிற உரிமைகளை எல்லாம் மறுதலித்து விட்டு பொருள் மற்றும் ஆன்மிகம் நிலையில் உன் சகோதரர்களோடும் குழுமத்தில் வாழ்வாயா? இது முழுமையான உன் திறந்த மனதை காட்டுகிறது.

ஆம் நான் வாழ்வேன்.

உன் சகோதரர்களோடு இணைந்து சேவையாற்றவும், முழுமையான அன்பில் உன்னையே கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க மணவாழ்வற்ற துறவு நிலையில் எப்போதும் வாழ்வீரா,

ஆம் நான் வாழ்வேன்.

ஒரே இதயம் ஒரே மனமுடையவராக இருக்கவும், நமது ஒற்றுமை முழுமையாக எய்தப்படவும், குழுமத்திற்குள், நற்செய்தியின் ஒரே ஏழை நபராக இருக்கும், உறவின் பணியாளர் சொல்லும் (அ) குறிப்பிடும் குழுமத்தின் நிலைமைக்கு ஏற்ற வழிக்காட்டுதல்களை கடைபிடிப்பீரா.

ஆம் நான் கடைபிடிப்பேன்.

துன்பத்திலும், இன்பத்திலும், நன்மையிலும், தீமையிலும், என் சகோதரர்களில் கிறிஸ்துவை மெய்மையில் உணர்வாயா?

ஆம், நான் உணர்வேன்.

இதன் மூலம், கிறிஸ்து மற்றும் நற்செய்தியின் காரணமாக, இப்போது முதல் நீர் இந்த குழுமத்தின் சகோதரர்.

இந்த மோதிரம் ஆண்டவரில் நமது மெய்பற்றின் அடையாளமாக இருக்கட்டும்.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 9 ஏப்ரல் 2010

“எனவே திரும்பி பார்க்கமாட்னே; என்ற உறுதியுடனும், என்றும் நிறைந்த நன்றியின் மகிழ்ச்சியுடனும் தொடக்கத்தை சந்திக்க அச்சமின்றி எழுந்து,
உம் ஆண்டவராகிய கிறிஸ்துவை
புகழ்ந்திடு,
பாடல் பாடி
அவரை வாழ்த்துவாயாக.”

வாழ்க்கை அர்பண உறுதிபாடு