செபத்தின் மூலம் கடவுளோடு உறவு கொள்ள முயற்சிப்பது, மனித சமுதாயத்தில் அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் புளிக்காரமாக விளங்குவது, என்னும் இரு குறிக்கோள்களால் தொடக்கத்திலிருந்து தூண்டப்பட்டு நிறுவப்பட்டு இயங்குவதே தேசே சமூகமாகும்.
செபம், பாடல், மௌனம், சிந்தனை ஆகியவற்றின் மூலம் இறைவனொடு உறவு கொள்ளும் வாய்ப்பை தேசேயில் தங்கி இருப்பவர்கள் பெறுகிறார்கள்.
தேசேயில் நடைபெறும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் எளிமையான வாழ்வின் அனுபவம், கிறிஸ்து நமது அன்றாட வாழ்வில் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது.
தங்கள் வாழ்க்கை முழுதும் கிறிஸ்துவைப் பின்பற்றும் வழிகளை சில இளைஞர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய இறை அழைப்பை உய்த்துணர்வதற்கு தேசேயில் தங்கும் அனுபவம் உதவும்.