30 வயதக்கு கீழ் உள்ளவாகள்
இங்கு வாழும் முறை எளிமையானது.. நீங்கள் ஈஸ்டர், விண்ணெற்பு, பெந்தகோஸ்த், கோடைகாலம். அனைத்து புனிதர் வாரம் போன்ற நாட்களில் வந்தால் ஒரு கூடாரம் தங்குவதற்கு கொண்டுவாருங்கள்.
உறங்க படுக்கை, துண்டு, பாய். படுக்கை, போர்வை கொண்டு வாருற்கள். கூடாரம் கொண்டுவர முடியாவிட்டால் எங்களிடம் உள்ளதை பயன் படுத்தலாம் (ஆணுக்கும் பெண்ணுக்கம் தனித்தனியாக). நீங்கள் தங்குவதற்கு தேவையான பொருட்கள் இங்கு கொடுக்கப்படும். குளிர் காலத்தில் சூடேற்றப்பட்ட தங்கும் வசதிகள் எல்லாருக்கும் உண்டு.
30 வயதுக்கு மேற்பட்டவாகள்
முடிந்தால் தங்குவதற்கு தேவைப்படும்: கூடாரம் (tent) கூண்டு வண்டி (caravan) மோட்டோர் வண்டி கொண்டு வரவும். இல்லாவிட்டால் தேவையான தங்கும் வசதிகள் இங்கு செய்து தரப்படும். முன்கூட்டியே இத்தகைய தங்கும் வசதிகளை குறிப்பாக பலர் வரும் காலங்களில் நாங்கள் ரிசர்வ் செய்து வைக்க முடியாது. 30 வயதுக்கு மேற்பட்டவாகள் டெய்சேயில் அல்லது அதற்கு பக்கத்தில் நீங்கள் எங்கள் அறைகளில் பிறருடன் செர்ந்து தங்க வேண்டியிருக்கம். 30 லிருந்து 65 வயதுக்கு உட்பட்டவாகள் பல படுக்கைகள் உள்ள பெரிய கட்டடத்தில் தங்குவார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவாகள் 3 படுக்கைகள் உள்ள அறையிலும், தம்பதிகளுக்கு முடிந்தால் இரு படுக்கைகள் உள்ள கட்டிலும் இருக்கும். டேய்சேயிலோ. பக்கத்து கிராமத்திலோ இனம் தம்பதிகள் கூடாரத்தில் தங்குவார்கள்.
விசே தங்கும் வசதிகள் எங்களிடம் குறைவாகவே உள்ளது. மிக வயதானோர், உடல் ஊனமற்றொர் தள்ளு வண்டிகள் பயன்படுத்தலாம். இணையதளத்தில் முன்கூட்டியெ பதிவு செய்து கொள்ள வேண்டும். பரிசுத்த வாரம், ஈஸ்டர், பெந்தகொஸ்த், விண்ணேற்பு வாரங்களை தவிhக்கவும். மேலும் ஜூலை மத்தியிலிருந்து ஆகஸ்ட் முடிவு வரையும் தவிர்க்கவும்.
படுக்கை, படுக்கை விரிப்பு, துண்டு முதலியன கொண்டுவர மறக்க வேண்டாம்.
குழந்தைகளுடன் குடும்பத்தார்
எல்லா குடும்பங்களுக்கும் உணவு உண்டு. பின் விவிலிய வாசக சிந்தனை முதலியவையும் உண்டு. குடும்ப கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் வரும் குடும்பத்தார் வயது வந்தொர்க்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.
டெய்சேயில் வந்து இறங்கியதும் தங்கும் வசதிகள் அளிக்கப்படும். முடிந்தவாகள் ஈஸ்டரில் கூடாரங்கள் கொண்டு வரவும். இல்லாவிட்டால் இங்கு ஒரு குடும்ப கூடாரம் தரப்படும். சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பத்தார்க்கு முன்னுரிமை தரப்பட்டு தங்க அறைகள் தரப்படும். வரவேற்பு மிக எளிமையானது.
மிகவும் சிறிய குழந்தைகளுக்குரிய படுக்கை விரிப்பு. படக்கை துண்டு, கட்டில் கொண்டு வரவும்.