இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்
வருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி?பின்வரும் தகவல்கள் வயதானவாகளை கூட்டி வருபவர்க்கு தரப்படுகிறது. தேசேக்கு வரும் மற்றவர்களுக்கும் இது பயன்படும்.
நிங்கள் குழுவின் தலைவரானால் 15-16 வயதுக்கு உட்பட்டவர்களை கூட்டி வருவது பற்றிய விவரங்களை அறிய கிளிக்: உங்கள் குழவினரை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். குழுவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும் முன் பதிவு செய்து கொள்க. தேசேவை விட்டு வெளியேறுமுன் உங்கள் குழுவை பின் வரும் வாரங்களில் ஒர் நாளில் திரும்பவும் சந்திக்கப்பபோகும் நாளையும் நேரத்தையும் முடிவு செய்து கொள்க. இந்த சந்திப்பில் குழுவில் ஒவ்வொருவருக்கும் தேசே அனுபவத்தில் எது முக்கியமானதாக இருந்தது என்பதையும். அவாகளின் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பயன்படப் போகிறது என்பதையும் பேசி தெரிந்து கொள்ளலாம். ஒரு குழவைக் கூட்டிக்கொண்டு வருவதாக இருந்தாலும், அல்லது ஒர் குழவின் அங்கத்தினராக வந்தாலும். தயாரிப்பு முக்கியமாகும். கூட்டங்களின் தன்மை பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் கூட்டத்தில் மிகுந்த பயனுள்ள முறையில் கலந்து கொள்ளலாம். தேசே அனுபவத்திற்குப் பிறக பின் நாட்களில் அந்த அனுபவத்தின்படி வாழ்வதற்கும் மிக உதவியாக இருக்கும். |