இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்
செலவு எவ்வளவு?வெளி நிறுவனம் எதுவும் எங்களுக்கு உதவித்தொகை அனுப்புவதில்லை. கூட்டங்களுக்கு வருவோரின் பங்களிப்பு பணத்தையும், எங்கள் பொது நிதிக்கு அனுப்பும் சிலரது பணத்தையும் நாங்கள் தேசே செலவுக்கு பயன்படுத்துகிறொம். நீங்கள் தங்குவதற்காக நிங்கள் கொடுக்கும் பணம் உங்கள் உணவு, தங்கும் வசதி, கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றிற்காக செலவிடப் படுகிறது. எந்த நாட்டிலிருந்து ஒருவர் வருகிறார் என்பதைப் பொறுத்து அவரிடமிருந்து உதவித் தொகை எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் யோசனையாக தெரிவிக்கும் பணத் தொகையின் அளவகளில் ஒன்றை வருபவாகள் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வேண்டுமென்றால் (receipt) கேட்டு வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் தேசேயை விட்டு வெளியெறிய பிறகு நாங்கள் பற்றுச் சீட்டு அனுப்பி வைக்க முடியாது. இளைஞாகளின் தலைவாகள் இளைஞர்கள் கொடுக்கக் கூடியதை முடிவு செய்யலாம். ஒரு இரவுக்கென்று இல்லாமல், இரவு உணவு மதிய உணவு இரண்டுக்கும் சேர்த்தே ஒரு நாளுக்குரியது கணிக்கப்படுகிறது. நீங்கள் ஞாயிறு வந்து அடுத்த ஞாயிறு வரை இருப்பதானால் 7 நாட்கள் தங்குவதாகக் கருதி செலவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஞாயிறு காலை வெளியெற விரும்பினால், மதிய உணவு பார்சல் எடுத்துக் கொண்டு போக விரும்பினால் 7 நாள் தங்கியதாக வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிறு வந்து அடுத்த ஞாயிறு பிற்பகல் வரை தங்கினால் வெளியேறும்பொது உணவுப் பாhசல் எடுத்துச் செல்ல விரும்பினால் 8 நாள் தங்கியதாக கருதுக. சனிக்கிழமை மாலை வந்து அடுத்த ஞாயிறுவரை தங்கி உணவுப் பார்சல் எடுத்துச் செல்ல விரும்பினாலும் இதேபோல் கணக்கிட்டுக் கொள்க. வெள்ளிக்கிழமை இரவுச் சாப்பாட்டுக்கு வந்து ஞாயிறு மதிய உணவுக்குப் பிறக வெளியெறினால் 2 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்க. ஒரு நாள் மாலை வந்து அடுத்த நாள் காலை வெளியேறினால் ஒரு நாளைக்குரிய குறைந்தபட்ச பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. செலவுக்கான எங்கள் பங்களிப்பை எப்படி வழங்குவது?உங்கள் வங்கியிலிருந்து எங்கள் வங்கிக்கு நீங்கள் கொடுக்க விரும்புவதை டிரான்ஸ்பர் செய்யலாம். அல்லது travellers’ cheques பயன்படுத்தலாம். நீங்கள் எங்களிடத்தில் கொடுக்கும் காசோலை எங்கள் வங்கியில் செல்லுமா என்று முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்ளவும். |