இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்

மேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி

தேசேயில் நடைபெறும் கூட்டங்கள் அங்கு வாழும் சகோதரர்கள் சுற்றி இருக்க நடைபெறுகிறது. வாரம் முழுதும் அங்குள்ள சமூகத்தினரது வாழ்வோடு ஒன்றரக் கலந்து செயல்பட ஒவ்வொருவரும் தயாராக வர வேண்டும்.: ஒரு நாளைக்கு மூன்று தடைவை செபத்திற்கு சாதரருடன் சேர்ந்து கொள்வது, மற்ற நாடுகளிலிருந்து அங்கு வந்து தங்கி இருப்போருடன் கூட்டங்களிலும். உணவு உண்பதிலம். சிறு குழு கலந்துரையாடலிலும், சில உடல் வேலைகளை (உணவு பரிமாறுதல். பாத்திரங்கள் கழுவுவது போன்றவை) செய்வதிலும் சேர்ந்து கொள்வது, எளிமையான வாழ்க்கை வாழ்வது, கோவிலைச் சுற்றியும் பிற சில குறிப்பிட்ட இடங்களிலும் அமைதி அனுசரிப்பது, முக்கியமாக இரவில் மௌனம் காப்பது, போன்றவை இதில் அடங்கும். ஓவ்வொரு நாளுக்கும் உரிய கால அட்டவணையை “கூட்டங்களில் என்ன நடக்கும்?” என்ற தலைப்பில் நாம் கூறியவற்றில் காணலாம்.

தேசேக்கு வருபவர் ஒவ்வொருவரும் பிறர் கண்டிப்புக்காக வராமல் தாமாக விரும்பி வரவெண்டும்.

- 17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள்: இவர்களுக்கு உரிய கூட்டங்கள் வாரா வாரம் அல்லது வார இறுதியில் நடைபெறும்.

- 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்: இவர்களுக்குரிய கூட்டங்கள் ஈஸ்டா, ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் சில வாரங்களில் நடைபெறும்.

- 15 முதல் 16 வயதக்கு உட்பட்டவர்கள்: வாரம் முழுவதுமோ, வியாழக்கிழமை மாலையிலிருந்து ஞாயிறுமுடியவோ, தம் தலைவாகளுடன் வந்து கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

- 15 வயதுக்கு கீழ் உள்ளவாகள்: தங்கள் பெற்றோருடன் குடும்ப கூட்டங்களில் மட்டும் கலந்து கொள்ளலாம்.

- 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள்தங்கள் பெற்றோர்யின் கையெழுத்து இடப்பட்டு, கூட்டங்களில் கலந்த கொள்ளலாம் என்ற அனுமதி அவர்களால் அளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தங்களுடன் கொண்டு வரவேண்டும். இதன் மூலமாக தங்கள் பிள்ளைகள் டெய்சேயில் தங்கி இருக்கும்போது அவர்களுக்கு சட்ட பூர்வமான பெற்றோர் பொறுப்பு ஏற்கிறார்கள், ஏதாகிலும் மருத்துவ சிகிச்சை தேவைப் பட்டால் அதுபற்றி எடுக்கப்படும் முடிவகளுக்கும் அவாகள் பொறுப்பு ஏற்கிறார்கள். இந்த படிவங்கள் பெற விரும்புவோர்: meetings taize.fr

தேசேக்கு வந்து தங்கும் நாட்களை தெர்ந்தெடுத்தல்

ஞாயிறு பிற்பகல் முதல் அடுத்து வரும் ஞாயிறு வரை, காலை நற்கருணை வழிபாட்டுக்குப் பிறகு, (ஈஸ்டர். பெந்தகோஸ்து வார இறுதிகளைத் தவிர: அக்காலத்தில் திங்கட்கிழமை வந்து வெளியேறும்; நாளாக இருக்கும்.) உங்களால் முழு வாரத்திற்கும் வர முடியாவிட்டால் வார இறுதிக்கு வர முயலுங்கள். அதாவது வியாழன் அல்லத வெள்ளி வந்து ஞாயிறு வரை இருந்து திரும்பலாம்.

மூன்று முழு நாட்களுக்குக் குறைவாக வருவதை தவிர்க்கவும்.. ஒரு வாரம் முழுதும் தங்கி செல்வது இன்னும் அதிக பயனுள்ளது.

ஒரு வாரத்திற்கொ அல்லது வார இறுதிக்கு மட்டுமோ, ஒரு குழுவைக் கூட்டிவரும் நோக்கம் இருந்தால், குறிப்பாக பள்ளி மாணவாகளை கூட்டி வருவதாக இருந்தால், முதலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். நீங்கள் பதிவு செய்த பிறகு நீங்கள் கூட்டி வரும் நபாகளின் எண்ணிக்கையிலோ, வரும் நாட்களிலொ மாற்றம் செய்தாலொ அல்லது வர இயலாமல் போனாலொ தாமதமின்றி எங்களுக்கு இணைய தளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

குழுவோடு வரும் வயதானோர், தொடர்புக்குரிய ஆட்கள்

நீங்கள் 15-16 வயதுடையவாகளை கூட்டி வரும்போது ஒவ்வொரு 5 பேருக்கும் (தங்கும் வசதியுடன்-ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி) 20-29 வயதுடைய ஒரு தலைவர் அவர்களுடன் வருவது நல்லது..இந்த ஏற்பாடு தங்களுக்கு சங்கடத்தை உண்டாக்குமென்றால் எங்களிடம் தெரிவிக்கவும்.

மேலும் ஒவ்வொரு 7 பேருக்கும் நாங்கள் தொடர்பு கொள்வதற்கு நாளின் நடவடிக்கைகளை மேற்பாhப்பதற்கும் ஒரு வயதான ஆள் வேண்டும். இளைஞாகளைப்போல இவர்களும் தங்குவதற்காக தங்கள் பங்களிப்பு தொகையை வழங்கலாம்.

17 வயதுக்கு மேற்பட்டவர்களை கூட்டி வருவதாக இருந்தால் அவர்களில் 7 பெருக்கு ஒருவரை தேர்ந்தெடுத்து அவரையே தொடர்பு ஆளாக பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்பு ஆட்கள் தாங்கள் யார் என்று குழுவினருக்கு கூட்டத்தின் தொடக்கத்திலேயெ அறிவித்துக் கொள்ள வேண்டும்.

30 வயதுக்கு மேற்பட்ட மற்றவாகள் தங்கள் சொந்த கூடாரங்களைக் கொண்டு வராவிட்டால், அவரவாகளுடைய வயதுக்கும், எங்களிடம் இருக்கும் தங்கும் வசதிகளுக்கும் ஏற்றபடி, பல படுக்கைகள் உள்ள எங்களின் தங்கும் கட்டடத்திலோ, 2 அல்லது 3 படுக்கைகள் உள்ள அறைகள் உள்ள அறைகளிலோ தங்க வைக்கப்படுவார்கள். நாங்கள் அளிக்கும் தங்கும் அறைகள் டெய்சேயிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும். இவை இளைஞாகள் தங்கும் இடங்களிலிருந்து தள்ளி இருக்கும். Further information: adults aged 30 and over.

வாகன ஓட்டிகளுக்கு நாங்கள் தங்கும் வசதி செய்து கொடுக்க முடியாது. டேய்சே வளாகத்தில் வாகனங்கள் நிற்பாட்ட அனுமதி இல்லை. இந்த சுற்றுப் புரத்தில் உள்ள ஹோட்டல் விபரங்கள் நாங்கள் தர முடியும்.

மேலும்:

- நீங்கள் வார இறுதிக்கு மட்டும் வருவதானால், வியாழக்கிழமை மாலை வந்துவிடவும். சனிக்கிழமை காலையில் வந்தால் டெய்சே வாழ்க்கையில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாது போகும்.

- ஓவ்வொரு நாளும் விவிலிய வாசக சிந்தனைகள் தேசே சகொதரர் ஒருவரால் நடத்தப்படும். உங்கள் குழு நபர் ஒவ்வொருவரிடமும் ஒரு விவிலிய புத்தகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதன்பின் நடைபெறும் சிறு குழு கலந்துரையாடல் இளைஞர்களாலேயெ முன்னின்று நடத்தப்படும்.

- தேசேயில் தங்கி இருப்பதற்கு ஒரு நிபந்தனை: தங்கியிருக்கும் நாட்களில் நீந்களாக சில மணி நேரத்துக்குக்கூட சுற்றுலா அல்லத பிக்னிக் என்ற போக கூடாது. இத்தகைய பிக்னிக்குகள் இங்கு நடைபெறும் கூட்டங்களுக்கு தடையாக இருப்பதுமன்றி மற்றவர்களுக்கும் வெளியே சென்றுவர சோதனையாக இருக்கம். நீங்கள் இங்கு தங்கி இரக்கும்பொது உங்கள் குழுவினரை சந்திக்கும் நேரங்காலத்தை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மற்ற கூட்டங்களுக்கு தடங்கல் இல்லாத விதத்தில் இதை நடத்துங்கள்.

- பாதுகாப்பு காரணங்களுக்காக காஸ் அடுப்பு அல்லது காஸ் வெளிச்சம் கொண்டுவர வேண்டாம். மெழுகு திரி பயன்படுத்த வேண்டாம். யாராவது இவற்றை கொண்டு வந்தால் எங்களிடம் வந்ததும் எங்களிடம் கொடுத்து விடுங்கள். வெளியேறும்பொது நீங்களெ எடுத்துச் செல்லலாம்.

- தேசேயில் “ஓயாக்” என்ற இடத்தில் மட்டும்தான் மதுபானம் வங்கி அருந்தலாம். உங்களில் யாராவது மது பாட்டில்கள் கொண்டுவந்தால் வந்ததும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள். போகும்பொது எடுத்துச் செல்லலாம்.

மேற்கூறிய வற்றை எல்லாம் உங்கள் குழவினரிடம் இங்கு வருமுன் நன்றாக விளக்கி விடுங்கள்.

வருமுன் விரைவாக இணைய தளத்தில் உங்கள் குழுவினர் பெயர்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவு செய்து விடுங்கள்: கிளிக்: registration form எத்தனை பேர் நிச்சயமாக வருவார்கள் என்று தெரியாவிட்டாலும் இதைச் செய்துவிடுங்கள்.

Printed from: https://www.taize.fr/ta_article11900.html - 29 November 2023
Copyright © 2023 - Ateliers et Presses de Taizé, Taizé Community, 71250 France