2006 ஆம் ஆண்டுக்கு

முடிவு பெறாத கடிதம்

[(ஆகஸ்ட் 16 ம் தேதியன்று தான் இறப்பதற்கு முன்பு மதியம், சகோ. ரோஜர் அவர்கள், ஒரு சகோதரரை அழைத்து, ‘நான் சொல்வதையெல்லாம் கவனமாக குறித்துக் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி நீண்ட நேரம் அமைதியாக சிந்தனையில் முழ்கினார். பிறகு ஆரம்பித்தார். ‘மனித குடும்பத்தில் வாய்ப்புகளை உருவாக்க, நமது சபை அவர்களில் அதை பரப்ப……’ இத்துடன் அவர் நிறுத்திக்கொண்டார்.

இந்த வார்த்தைகள் அவருடைய வயதுமுதிர்ந்த காலத்திலும் கூட அவருக்கு எப்படி தோன்றியது என்று கூட நாம் நினைக்கிறோம். அவர் எதை ‘பரப்ப’ என்று சொன்னார்? ‘இறைவனின் அன்பை, தம்மால் முடிந்த அளவிற்கு, அனைத்து மாந்தருக்கும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும்” என்று சொல்ல மறந்திருக்கலாமே! நம்முடைய சபையை இந்த ஒளியின் மறைபொருள் உண்மையை உண்மையான ஈடுபாட்டுடன் மக்களிலில் பரப்ப விரும்பினார். மறுமையில் அமைதியை தேடுபவர்களுடன் சகோதரர்களாகிய நாங்கள் இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறோம்.

சகோ. இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் மிலன் கூட்டத்திற்காக எழுதிவைத்த கடிதத்தை படித்து ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். ஒரு சில கருத்துகள், செயல்கள் மீண்டும் தீவிரமாக ஈடுபட வைக்க நினைத்தார். ஆகவே அவைகளை எடுத்து 57 மொழிகளில் மொழிபெயர்த்தோம். இது ஒரு அருமையான சகோதரர் அவர்களின் இறுதி கடிதம். இது இறைவனுடன் சேர்ந்து அந்த பாதையில் பயணிக்க உதவும் “பயணத்தை அகலப்படுத்தும்” (தி. பாடல்: 18 : 36).
2006 – ல் நடைப்பெற்ற தேசே கூட்டத்தில், முடிவு பெறாத இக்கடிதத்தை ஆய்ந்து பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும், எந்த கண்டத்திலிருந்தாலும் இதை எம்மனிதரும் அறிந்தால் தம் வாழ்க்கை அமைப்பதில் வெற்றி பெறுவர்.

சகோ. அலோஸ்[(

“உங்களுக்கு சமாதானம் : என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.” [1]
கடவுள் கொடுக்கும் சமாதானம் என்ன?

முதலில், இது இதயத்தின் ஆழத்திலுள்ள சமாதானம் என்று கருத வேண்டும். இந்த அமைதி தீவிரவாதத்தாலும், குழப்பத்தாலும் நொறுக்கப்பட்டுள்ள இவ்வுலகை புரிந்துக்கொள்ள(அணுக) உதவும்.

இறைவனிடமிருந்து வரும் இந்த அமைதி, எங்கு அமைதி தேவைபடுகிறதோ அங்கு நிரப்ப தேவைப்படுகிறது. உலக அமைதி என்பது மிகவும் அவசரமானது. உலகில் துன்புறுவோருக்காகவும் நாளைய இளைஞர்களை இன்றைய குழந்தைகளுக்கு துக்கமும் பாதுகாப்பின்மையும் இல்லாமலிருக்க இந்த அமைதி தேவை.

புனித அருளப்பர், தன் புத்தகத்தில் ‘அன்பே இறைவன்’ என்று கூறும் இவ்வார்த்தையை கடைபிடித்தால், [2] நாம் நீண்ட தூரம் இறைவனோடு செல்வோம்.

இந்த வார்த்தைகள் நமக்கு என்ன சொல்கிறது?
கடவுள் யாரையும் தீர்ப்பிட தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் இறைவனால் அன்பு செய்யப்படவும், இறைவனில் சங்கமமாகும் பாதையை கண்டடையவும் அனுப்பினார்.

இறைவனின் அற்புத அன்பை, தெரிந்துக் கொள்ளவும், சுவைக்கவும் பலர் இருக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் ஏன் நான் அந்த அன்பில் நிலைத்திருக்க மறுத்துள்ளேன் என்கின்றனர்?
கடவுள் நம்முடைய கொடுமையான தனிமையிலும் நம்முடன் இருக்கிறார் என்று ஒவ்வொருவரும் நினைத்தால், கடவுள் சொல்கிறார், ‘என்னுடைய பார்வையில் நீ தூய்மை பெறுவாய். உன்னை அன்பு செய்து உனக்கு நான் பொக்கிஷத்தை தருவேன்’ [3] நற்செய்தி வாசகங்களின் சாரமாக இருக்கும் ‘அன்பை’ கடவுள் நமக்கு கொடுக்க முடியும்.

இறைவனின் நிலையான கருனையை பெற கடவுள் நம்மை கனிவுடன் கேட்கிறார்.

என்னவெனில், இறைவனின் உண்மையான அன்பை புரிந்துக்கொள்ள கடினமாக இருந்தாலும் எல்லாவற்றிக்கும் மேலாக இறைவனின் அன்பை கண்;டடையும்போது அது நிலையான ஒன்றாகி விடும். அப்போதுதான் நமது இதயம் மனந்திரும்பி அமைதி கொள்ளும்.

ஆகவே, நம்மை நொறுங்கடிக்கின்றவற்றிலிருந்து இறைவனை நினைப்போம். மலர்ச்சிக்காகவும், நறுமணத்திற்காகவும், புத்துயிருடன் உள்ள மொட்டுகளை போல முக்கியத்துவம் பெறுவோம்.

இறைவன் முழுநம்பிக்கையுடன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார் என்பதற்கு விழிப்புடன் இருக்கிறோமா? இறைவன் அன்பு செய்வதுபோல் நம்மையும் அன்பு செய்ய அழைக்கிறார்.
இறைவனுக்கும், மற்றவர்களுக்கும் தரும் உண்மையான அன்பு வேறு இல்லை. இறைவனில் ஊன்றப்பட்ட வாழ்க்கை அன்பு செய்ய தயாராக உள்ளது. எல்லையில்லா நன்மையை பெறும் இதயமாக இருப்பீர்கள். [4]

வாழ்க்கையில் அருமையான அழகை பெற்றிருக்கும் யாவரும் நம்பிக்கையுடன் அன்பை தேடுவர்.

அன்பு செய்து அதன்படி கடைபிடித்து வாழும் யாவரும் கீழே வரும் இந்த கேள்வியை தனக்குத்தானே கேட்க வேண்டும்.

அருகில் உள்ளவர்களின் அல்லது தொலைவில் உள்ளவர்களின் வலியையும், வேதனையையும் எவ்வாறு போக்குவீர்கள்?
ஆனால், அன்பு செய்வது என்றால் என்ன?

தாழ்வாக நடத்தப்படுகிறவர்களின் வலியையும், வேதனையும் பகிர்ந்து கொள்வதா? ஆம் அதுவே.

மற்றவர்களிடம் காட்டும் சுயநலமில்லாத, கனிவான இதயத்தையும், தியாக உள்ளத்தையா? ஆம்.
மீண்டும் அன்பு செய்வது என்றால் என்ன?

அன்பு என்றால் மன்னித்தல். மனந்திருந்திய மக்களை போல் வாழ்தல், [5] மனம்திரும்புதல் ஆன்மாவிற்கு வசந்த காலத்தை கொண்டுவரும்.

நான் மலையடிவாரத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். எங்கள் வீட்டிற்கு அண்மையில் ஒரு ஏழ்மையான குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களின் அம்மா இறந்து விட்டாள். என்னைவிட இளையவனான அவர்களில் ஒருவன் அடிக்கடி எங்களை பார்க்க வீட்டிற்கு வருவான். என் அம்மாவை, அவன் அம்மா போன்று நினைத்து மிகவும் அன்பு செய்தான். ஒரு நாள் அவன் கிராமத்தை விட்டு போக வேண்டி இருந்தது. அவனுக்கு பிரிவு என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஐந்து அல்லது ஆறுவயது குழந்தை எப்படி தன்னை தேற்றிக் கொள்ளும்? பிரிவு என்ற நிலை அவனுக்கு தேவையானதொன்று என்பதை அவனால் ஈடுகட்டமுடியவில்லை.

இயேசுவின் மரணத்திற்கு முன்பு, அவருடைய நண்பர்களுக்கு ‘ஆறுதல் பெறுவர்’ என்று கூறுனார். தூய ஆவியானவரை அனுப்பி அவர்களுக்கு ஆறதலையும், அவர்களுள் என்றென்றைக்கும் இருக்கச்செய்தார். [6]

“உன்னை நான் தனிமையில் விடமாட்டேன், தூய ஆவியை அனுப்புவேன். நீ எல்லையில்லா துன்பத்தை அனுபவித்தாலும் உன் அருகாமையிலேயே இருப்பேன்” என்று ஒவ்வொருவரின் இதயத்தில் இன்றும் இயேசு கூறிக்கொண்டுள்ளார்.

தூய ஆவி கொடுக்கும் ஆறுதல் சமாதானத்தை அமைதியுடன் தேடி இறைவனிடம் அற்பணிப்போம். பிறகு எது வந்து நேரிடினும், அவற்றை முறியடிக்கும் சக்தி பெற்றவர்களாகிறோம்.

நமக்கு ஆறுதல் கொடுக்க யாருமில்லை என்ற ஏக்கமா? எல்லாரும் எப்போதாவது நம் துன்பத்திலோ மற்றவரின் துன்பத்திலோ வீழ்ந்து விடுகிறோம். இது நம்முடைய நம்பிக்கைக்கு பெரும் சவாலாக இருக்கும். நம்பிக்கையுள்ள, அமைதியான உள்ளம் கொண்டவர்கள் மற்றவர்களில் வெற்றி பெறுவர்.

ஒரு விதமான மனவருத்தம் ஆழமான அடையாளத்தை உண்டாக்கும். நாம் மிகவும் அன்பு செய்த ஒருவர், உங்களுடன் சேர்ந்து உலகில் அதிகம் சாதிக்க முடியும் என்றவர் இறந்துவிட்டால்? இந்த இழப்பு அதிக பாதிப்பை விட்டு செல்லும்.
கொடுமையான வருத்தத்திலுள்ள ஒருவனுக்கும் நற்ச்செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். வேதனைகளை அடைந்து கொண்டுள்ள மானி;டருக்கு தன்னிடம் ஒன்றித்துக்கொள்ள அவர்களில் ஒளியை உய்விக்கிறார். நம்பிக்கையின் பாதையில் நாம் நடக்கிறோம் என்பதை கண்டடைவோம். இறைவனின் அன்பு குழுமமாக அதுவே திருச்சபையாக ஒன்று சேருவோம். இயேசுவின் திருச்சபை அமோகமான ஆறுதல் தரும் பரிசு அதுவே. [7]

திருச்சபையானது, அன்பும், மன்னிப்பும் மூலம் இதயங்களை குணப்படுத்திக்கொண்டுள்ளது. இது யேசுவிடம் சுலபமாக செல்லும் ஒரு குழுமமாக முழுமை பெறுகிறது. ஓவ்வொரு மனிதனின் ரகசியங்களை திருச்சபை அன்பு செய்து, புரிந்துகொள்ளும் போது, தொடர்ந்து கேட்கும்போது, ஆறுதலளித்து குணப்படுத்தும்போது அது குடும்பத்தின் பிரதிபலிப்பாக மாறும். அமைதிக்கும், மனமாற்றத்திற்கும் தேடும்போது, ஒவ்வொருவரில் சோதனைகளை கடக்க வேண்டியதுள்ளது. ‘சுலபமாக கிடைப்பது எதுவும் நீடிப்பதில்லை’. தூய ஆவியின் ஒன்றிப்பு சுலபமானது. இது உள்ளத்தில் ஆழமாக அன்பு கொள்ளவும், சூழ்ந்துள்ளது. ஆனால் சந்தேகிப்பதற்கு இடம் கொடுப்பதில்லை.

ஒன்றிப்பின் தூதுவர்களாக நாம் ஒவ்வொருவரும், அவ்வப்போது இளகிய உள்ளம் படைத்தவர்களாக, நம்பிக்கை தரும் பாதையில் நடக்க தயாராக உள்ளோமா?

இந்த பாதையில் தோல்விகள் இருக்கும் அத்தருவாயில் இறைவனில் ஒன்றிக்க, அதற்கு தேவையான அமைதியை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாது, நம்முடைய பெலமடைந்தவற்றிற்கு பலம் சேர்க்க தூய ஆவியின் இரக்கத்தை மன்றாடுவோம்.

நமது வாழ்க்கை முழுவதும், தூய ஆவியின் பிரசன்னம் நமது ஒவ்வொரு தொடக்கமும் அமைதியில் செல்ல உதவும். [8]

மனித குலத்தை பெரிதுபடுத்த நம்முடைய சபையின் பணிகள்...

[1அருளப்பர் 14: 27

[21 அருளப்பர் 4: 8

[3இசையாஸ் 43: 4

[41974 ஆம் ஆண்டு இளைஞர்களின் கூட்டத்தின் தொடக்கத்தில் சகோ. ரோஜர் அவர்கள் “அன்பு இல்லையேல், வாழ்கையில் நன்மை ஏது? அதுவே நம் வாழ்க்கையின் அர்த்தம். என்றும் அன்பு செய்யப்படுவது நிலையான வாழ்வின் அன்பிற்கு அழைத்துச்செல்லும். ஆகவேதான், நமது வாழ்விலும்கூட அன்பிற்காக இறக்க தயாராக உள்ளோம். ஆம், அன்பிற்காக இறப்பவர்கள் மகிழ்வர்” என்று கூறினார். சகோதரரை பொறுத்தமட்டில் அன்பிற்காக இறப்பது, இறுதிவரை அன்புசெய்வதுதான்.

[5“மனிதர்களாக வாழுபவர்கள் பாவ மன்னிப்பு பெற்றவர்கள்” இந்த வார்த்தைகள் A Prospect of Happiness என்ற இவரது புத்தகத்தில், சகோதரர் இறப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக, இந்த வார்த்தைகள் தனக்கு என்னவாகியது என்பதை மீண்டும் விளக்கினார். என்னுடைய தாதி பாட்டி குருத்துவத்தில் இறைவன் அழைப்பிற்கு எனக்கு வழிகாட்டினார் என்பதை நினைவுகூர்ந்து, முதலாம் உலகப்போரின் பிறகு, என்னைப்போன்று வேறு யாரும் இருக்ககூடாது என்று அவரின் ஆழமான ஆசையாக இருந்தது. கிறித்தவர்கள் அனைவரும்; மற்றொரு உலகப்போர் நிகழாமல் இருக்க மனம் திரும்ப வேண்டும் என்று கூறினார். அவள் ஒரு பழைய பிரோட்டஸ்டான்ட் கிறீஸ்தவ குடும்பத்திலிருந்து வந்தாலும், கத்தோலிக்கர் ஆலயங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். இது அவளுடைய உறவினர்களுக்கு கெடுதல் ஏதும் நடவாமல் இருக்க கவனமாக இருந்தாள். நான் சிறுவனாக இருந்தபோது கத்தோலிக்க கிறிஸ்துவ நெறிமுறைகள், ஆழமான நம்பிக்கை போன்றவைகள் என்னை அடையாளம் காட்டியது”

[6அருளப்பர் 14:18 & 16:7

[7“இயேசு கிறீஸ்துவின் ஒன்றிப்பு” என்ற வார்த்தையை, 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 5 – ம் தேதி போப் இரண்டாம் ஜான்பால் அவர்களை வரவேற்றபோது சகோ. ரோஜர் பயன்படுத்தினார். எனக்காகவும் என் சகோதரர்களுக்காகவும், திருச்சபையில் முழுமை பெற்றுள்ள ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஒன்றிப்பை பெற நான் தொடர்ந்து ஏங்கிக்கொண்டுள்ளேன். ஏனைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முழவதும், வாழ்வின் இறுதிவரை இருந்து வாழ்வின் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். அங்கே மக்கள் நம்பிக்கையையும், பாவமன்னிப்பையும் உருவாக்குகின்றவர்களாக மாறவேண்டும். இவர்களுக்குள் மட்டுமி;ல்லாது நமது சந்ததியரான முதியோர் முதல் குழந்தைவரை உருவாக வேண்டும். நமது தேசே சபையில், இயேசுவின் ஒன்றிப்பை பின்பற்றுவது என்பது எரிகின்ற நெறுப்பு போன்றது. உலகம் முடியும்வரை வழிகளையும், அதற்கான முனைப்புகளும், தேவைப்பட்டால் அதற்காக மன்றாடுவதும் நல்லது. ஆனால் ஒன்றுமே இல்லாது வாழ்தல் கூடாது. இறைவன் ஒன்றிப்பில் நாம் திருச்சபையில் உள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது”.

[8மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பத்திகளும், டிச. 2004 - ல் லிஸ்பனில் நடைபெற்ற ஜரோப்பிய கூட்டத்தில் சகோதரர் அவர்கள் பேசியது. இது தான் அவர் மக்களோடு பேசிய இறுதி உரை.

Printed from: https://www.taize.fr/ta_article3392.html - 18 May 2024
Copyright © 2024 - Ateliers et Presses de Taizé, Taizé Community, 71250 France