கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்

“என்னை பின் செல்” என்று நற்செய்தியில் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு நாம் வாழ்க்கை முழுவதும் எடுக்கும் நிலைபாட்டில் பதில் தர முடியாத நம் எல்லோரிலும் எதிர்கால மகிழ்ச்சிக்கான ஆசை இருக்கிறது. ஆனால் மனச்சோர்வில் நம்மை விழந்தாட்டும் பல வரையரைகளால் நாம் நிபந்தனைக்குள்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுகிறோம் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஏற்பட்டு வருகிறது.

இருப்பினும் இறைவன் அங்கு பிரசன்னமாக இருக்கிறார். இறையாட்சி நெருங்கிவிட்டது (மாற் 1:15) நம் வாழ்வில் சூழ்நிலைகளில் அதன் அடிப்படையின் மீதே, அவைகளை கொண்டே உருவாக்க, எதிர் கொள்ளும் சூழலில், இறை பிரசன்னத்தை பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்.

செயலற்று இருத்தலின் கனவுகளில் மூழ்கி போக எவரும் விரும்புவதில்லை. நாம் என்னவாக இருக்கிறோம், என்னவாக இல்லை என்பதை பற்றிய ஒரு உடன்பாடு நமக்கு தேவை. இந்த தேர்ந்தெடுப்புகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியான வாழ்க்கையை தேடுகின்ற வேட்க்கை, இத்தகைய தேர்ந்தேடுப்புகளில் நம்மை ஈடுபட வைக்கிறது.

சிலர் தங்கள் குடும்ப வாழ்வில், சமுதாயத்தில், மற்றவர்களுக்காக நிலைப்பாட்டில் கிறிஸ்துவை பின்பற்ற தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். இன்னும் சிலர் துறவி வாழ்வை தேரந்தெடுப்பதன் மூலம், எப்படி கிறிஸ்துவை பின்பற்ற முடியும் என தங்களையே கேட்டு கொள்கின்றனர்.

வாழ்க்கை முழுவதற்கும் இது போன்ற தேர்ந்தெடுப்பை கொண்டிருக்கின்றவர்களை நான் ஊக்கப்படுத்த விரும்புகிறேன். இந்த நிலைப்பாட்டை சந்திக்கும்போது, உங்களுக்கு தயக்கம் வரலாம். ஆனால் இன்னும் நீங்கள் ஆழமாக செல்லும் போது, உங்களையே முழுமையாக அளிப்பதில், மகிழ்ச்சியை கண்டடைவீர்கள். அச்சத்தில் தங்களையே கைவிட்டுவிடாமல், தூய ஆவியின் பிரச்சன்னத்தில் இருப்பவர்கள் பேறுபெற்றவர்கள்.

இறைவன் உங்கள் தனிப்பட்ட விதமாக அழைக்கிறார். என்பதையும் உங்களை அன்பு செய்ய காத்திருக்கிறார் என்பதையும் நம்ப உங்களுக்கு கடினமாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைதான் அவருக்கு தேவை.
அழைக்கும் போது, இறைவன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கட்டளையிடுவதில்லை. அவரது அழைப்பு தனிப்பட்ட விதமான எதிர்கொள்ளல். கிறிஸ்து உங்களை வரவேற்கட்டும், எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று கண்டுபிடிப்பீர்கள்.

இறைவன் விடுதலைக்கு உங்களை அழைக்கிறார். அவர் செயல்படாத ஒருவரை நோக்கி உங்களை திருப்பவில்லை.

தூய ஆவியின் வழியாக இறைவன் உங்களில் உறைகி;ன்றார். ஆனால் உங்களுடைய இடத்தை எடுத்துத் கொள்ளவில்லை. மாறாக இறைவன் ஐயை பாடற்ற ஆற்றல்களை எழுப்பிவிடுகிறார்.

நீங்கள் இளையராக இருக்கும் போது, உங்கள் தேர்ந்தெடுப்புகளை திறந்து வைத்திட நீங்கள் அச்சமடையலாம் மற்றும் தேர்ந்தெடுப்பு செய்ய சோதனைக்குள்ளாகலாம். ஆனால் குறுக்கு சாலையில் நீங்கள் இருந்து கொண்டேயிருந்தால் எப்படி நீங்கள் முழு நிறைவை காணமுடியும்.

உங்களுக்குள் நிறைவேறாத ஏக்கங்களும், தீர்வுக்காணாத கேள்விகளும் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். இதயத்தின் வெளிப்படையான தன்மைக்கு உங்களையே ஒப்படையுங்கள்.
திருச்சபையில் உங்களுக்கு செவிமடுக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இன்னும் அதிக நேரம் செலவிட்டு செவிமடுத்தீர்களென்றால் உங்களையே முழுமையாக தர முடிவெடுக்க இயலும்.

கிறிஸ்துவை பின்பற்றுவதில் நீங்கள் தனியாக இல்லை. திருச்சபையாக இருக்கும் உறவின் மறைபொருளால் நாம் கொண்டு செல்லப்படுகிறோம். நம்மை தனிமைப்படுத்துவதிலிருந்து தயக்கத்தை தரும் புகழ்ச்சியானது மெல்ல மெல்ல நம் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான இன்ப ஊற்றாக மாறும்.

Printed from: https://www.taize.fr/ta_article6283.html - 19 April 2024
Copyright © 2024 - Ateliers et Presses de Taizé, Taizé Community, 71250 France