கிறிஸ்துவர்களின் ‘ஒப்புரவுக்காக’ அழைப்புஅருட்சகோதரர் ரோஜர், 1940-ல் தெய்சே குழுமத்தை ஏற்படுத்த ஜெனிவாவை விட்டு புறப்படும் முன் ஒப்புரவு என்ற உள்ளுணர்வினால் உந்தப்பட்டார். மனித குலத்தின் அமைதிக்காக ஏங்கும் கிறிஸ்துவர்களின், கடைசி நேரம் வரை ஒப்புரவை தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு பின், இதை தன் தனிப்பட்ட பயணம் என்ற தலைப்பின் அவர் இவ்வாறு விவரிக்கிறார். என் பாட்டியின் வாழ்கை சான்றினால் பண்பேற்றப்பட்ட நான், அவரை பின்பற்றி, என் மரபுவழி முதல்நிலை விசுவாசத்திற்கும் கத்தோலிக்க விசுவாசத்தின் மறைபொருளுக்கும் இடையே, எனக்குள்ளேயே ஒரு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதினால் யாரையும் புண்படுத்தாமல், எனது சுய கிறிஸ்துவ அடையாளத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன். அருட்சகோரர் ரோஜர் திறந்து வைத்த இந்த பாதையில் பயணிக்க ஒரு சாமாத்தியம் தேவை. இதில் சில விஷயங்கள் வற்புறுத்தப்படுகின்றன. இன்னும் நாம் இதை ஆய்வு செய்து முடிக்கவில்லை. கிறிஸ்துவில் நாம் ஒருவருக்கொருவர் உரியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவர்கள் பிரிக்கப்பட்டால், நற்செய்தி யாருக்கும் கேட்க முடியாமல் போய்விடும். சமுதாயத்தின் புதிய சவால்களுக்கு நாம் எப்படி பதிலளிக்க போகிறோம்? குறிப்பாக, மத உட்பிரிவுகள், கலாச்சாரங்களுக்குள் இருக்கும் பரஸ்பர புரிதல், ஆகியவைகளில் எல்லா கிறிஸ்துவ குடும்பங்களில் தூய ஆவி வைத்துள்ள கொடைகளை, ஒன்றிணைக்காமல் இணக்கம் எப்படி சாத்தியம்? நாம் பிரிந்திருந்தால் கிறிஸ்துவின் சமாதானத்தை எப்படி எடுத்து சொல்லவோ, செயலில் காட்டவோ முடியும்? மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது நாம் வாழும் நகரங்கள் கிராமங்கள் (அ) பகுதிகளில் உள்ள மக்களை, இரவு விழிப்பு வழிப்பாட்டிற்கு வந்து பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம். [1] இந்த வழிப்பாட்டிற்கு தயாரிக்க, இளையோர்களை மற்றவர்களிடம், இன்னொரு பங்குதலத்திற்கு, இன்னொரு சபைக்கு, இன்னொரு இயக்கம் (அ) குழுவிற்கு அனுப்பி, விசுவாசத்தை தேடிக்கொண்டிருக்கும் இளையோர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அப்போது தான் நாம் செய்கின்ற அனைத்து செயல்களோடும் நாம் விருப்பங்கள் வளரும். நம்மை எது பிரிக்கிறது என்பதை விட எது ஒன்றிணைக்கிறது என்பது தான் முக்கியம். இந்த மெய்மை நமது வாழ்வில் ஒளிர வேண்டும்.
[1] ஒவ்வொரு மாதமும் நமது வலை தளம் [www.taize.fr [http://www.taize.fr] (செபம் மற்றும் பாடல்) இந்த இரவு வழிப்பாட்டிற்காக திட்டங்களை தருகிறது. செபத்திற்கு பின், விவிலிய தியான சிந்தனையை தந்து பகிர்தல் நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு பங்கு மற்றும் சபையில் உள்ள வழிபாட்டை தடை செய்யாமல் கொண்டு செல்கிறது என்பதையே நற்செய்தி உனக்கு கூறுகிறது. |