ஓவ்வொரு நாளும் தேசே குடும்ப சகோதரர்கள் திருவிவிலிய பகுதி வாசித்து, ஒரு சிந்தனை வழங்கி, சிறிது நேரம் மௌனம் இருந்து சிறு குழுக்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.
பிற்பகலில் நடைபெறும் பயிலரங்குகள் வேலை, சமுதாயவாழ்வு, பண்பாடு, அமைதி போன்ற துறைகளில் விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்குமிடையே உள்ள உறவை ஆழப்படுத்திக்கொள்ள உதவுகின்றன.
இளைஞர்கள் ஒரு வாரம் முழுதும் அல்லது வாரத்தின் இறுதி நாட்களில் முழுதும் மௌனம் காத்து செபத்திலும் விவிலியத்திலும் தம் வாழ்க்கை நிகழ்வுகளில் கடவுள் தமக்கு என்ன எப்படி பேசுகிறார் என்பதைக் கண்டறிய நேரத்தைச் செலவிடலாம்.
தேசேயில் ஒரு நாள் கால அட்டவளை
திங்கள் முதல் வெள்ளி வரை
8.15 காலை: காலைச் செபம், காலை உணவு
காலை 10: தேசே குடும்ப சகோதரர் ஒருவர் அந்த நாளுக்குரிய நிகழ்வுகள் பற்றி அறிவித்து, அதன் பின் சிறிது மௌனம், சிந்தனைக்கு நேரம் கொடுத்து சிறு குழு உரையாடல் நடத்துவார்.
பிற்பகல் 12.30: நண்பகல் செபம், உணவு
பிற்பகல் 2: விரும்புவோர்க்கு பாட்டுப் பயிற்சி
பிற்பகலில் அனைத்து உலக சிறுகுழு கூட்டம் அல்லது கை உடல் வேலை.
மாலை 5.15: தேநீர்
மாலை 5.45: செவ்வாயிலிருந்து அவ்வார அந்தந்த நாளின் ஆய்வுப் பொருள்பற்றி பயிலரங்கம்.
இரவு 7.00 இரவு உணவு
இரவு 8.30: மாலைச் செபம், கோவில் பாடல்களுடன் திரு விழிப்பு. இரா மௌனம்
வெள்ளி மாலைச் செபத்திற்குப் பிறகு சிலுவையைச் சற்றிச் செபம்.
சனிக்கிழமை
பிற்பகல் 3.15: ஆய்வுப் பொருள் தொடர்பான பயிலரங்கம்
இரவு 8.30: கையில் திரிகளுடன் பாஸ்கா திருவிழிப்பு
ஞாயிறு
காலை 8.45 உணவு
காலை 10: நற்கருணை வழிபாடு
பிற்பகல்: 1 மதிய உணவு
இரவு 7: உணவு
இரவு 8.30: மாலைச் செபம்
வார செயல் திட்டம்
உங்கள் வயதுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரல்கள் உண்டு
17 முதல் 29யதுடையவர்களுக்கு
பலவித பயிலரங்குகள் உண்டு. உங்களுக்கு பிடித்த ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். சில வாரங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். சில சமயம் ஒரு குழு மட்டும் கூட்டத்திற்கு வந்திருக்கும். காலை நடைபெறும் முன்னுரைநிகழ்ச்சிக்கோ பிற்பகலில் நடைபெறும் சிறு குழு கலந்துரையாடலில் கலந்து கொள்வதோ உங்கள் விருப்பம். அல்லது ஒரு நாளில் பாதி நேரத்தை அந்நாளின் ஆய்வுப் பொருள் விளக்கத்தில் கலந்து கொள்வதும் மீதிநேரத்தை உடல் வேலைக்கு செலவிடுவதும் உங்கள் விருப்பம். அல்லது ஒரு வாரம் முழுவதையும் மௌனமாக தியானத்தில் செலவிடலாம். தனிப்பட்ட சிந்தனை செபம் முதலியவற்றிற்கு இதில் நிறைய நேரம் கிடைக்கும். மேற்கொண்ட விவரங்களுக்கு: கிளிக்.
25 முதல் 35 வயதுவரை உள்ளவர்களுக்கு
சில வாரங்களில் இந்த வயதினரை வழி நடத்த சில குறிப்பிட்ட குழக்கள் இங்கு இருக்கிறார்கள்.
15 மதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு
இவ்வயதினோர் இக் கூட்டங்களுக்கு வரலாம். போதுமான தலைவர்களுடன் வர வேண்டும். கூட்டங்களின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு வரவேண்டும். ஒரு வாரமோ அல்லது வார இறுதி நாட்களிலொ (வியாழன் அல்லது வெள்ளி முதல் ஞாயிறு) வந்து கலந்து கொள்ளலாம்.
ஓவ்வொரு நாட் காலையிலும் ஒரு சகோதரர்அந்நாளைய ஆய்வுப் பொருள்பற்றி விளக்குவார். புpற்பகலில் சிறு குழு கலந்துரையாடல், விவிலிய வாசக பகுதியை நடித்துக் காட்டல் போன்றவை நடைபெறும்.
ஓவ்வொரு குழவினரையும் இரவில் கண்காணிக்கவும், பகலில் அவர்களை வழி நடத்தவும் எத்தனை தலைவவாகள் தேவை என்னும் விவரங்கள் அறிவதற்கு: கிளிக்:.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள்
முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக ஒரு தனிப்பட்ட குழு உள்ளது. ஒரு வருடத்தில் ஒரு வாரம் இந்த வயதுடையொர் வந்து பயனடையலாம். ஓவ்வொரு நாளும் விவிலிய வாசக சிந்தனையும் சிறு குழு பகிர்வும் இடம் பெறும். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மௌன தியானத்தில் வாரம் முழுவதையும் செலவிட விரும்புவொர் இம் மாதங்களில் வரலாம். வயது வந்தவர்களுக்கான கூட்டங்களில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் : கிளிக்: அதில் உள்ள விவரங்களை கவனமாக வாசிக்கவும். இணையதளத்தில் நீங்கள் முன் பதிவுசெய்யலாம். ஆனால் எங்கள் பதில் வந்த பிறகு மட்டும் பயண எற்பாடுகளை தொடங்குங்கள்.