TAIZÉ

2012-2015 - மூன்று வருட தேடல்

 

பெர்லினில் சகோதரர் அலோய்ஸ் ’புதிய ஒருமைப்பாட்டை நோக்கி’ய பயணத்தின் பொருளை விளக்கினார்.

இந்த 2012 ஆண்டு கடிதத்தின் மூலமாக இதை வாசிக்கும் அனைவரையும் மனித ஒருமைப்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு பெறவும் அதை அதிகமாக வாழ்க்கையையில் செயல்படுத்தவும் ஊக்குவிக்கிறேன். இந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதன் மூலமாக நாம் அருகில் மற்றும் தொலையில் இருப்பவர்களுடனும் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்கிற எண்ணம் பெறுவதன் வழியாக நமது வாழ்க்கை பொருள் பெறுகிறது.
 
வாழ்க்கையின் பொருள் என்ன? என்ற தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, சகோதரர்களாகிய நாங்கள் சொல்வது ஒருமைப்பாடு. இந்த ஒருமைப்பாடுதான் வாழ்க்கைக்கு பொருளைக் கொடுக்கிறது அதை நாம் நமது வாழ்வில் செயல்பாட்டின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இந்த ஒருமைப்பாடு, அனைத்திற்கும் மேலாக அன்பு இருக்கிறது என்பதையும், அது கடவுள் அன்பை நோக்கி நம்மை அழைத்து சென்று அதில நம்பிக்கை வைக்கவும் செய்கிறது.
 
ஒருமைப்பாடு மற்றும் கடவுள் மீது நம்பிக்கை என்கிற இரு மதிப்பீடுகளை நாம் இந்த மூன்று ஆண்டுகளும் சிந்திக்க போகிறோம். ஏன் மூன்று ஆண்டுகள்? நாம் நேரம் எடுத்து செய்யவில்லை என்றால் எதையும் கட்ட முடியாது. ஏனென்றால் இந்த கேள்விகள் இடைவிடாத சிந்தனைக்கு நம்மை உட்படுத்தும். அப்போதுதான் அது நமது வாழ்வின் உண்மையான வாழ்வு செயல்திட்டமாக மாறும்.
 
ஆகஸ்டு 2015, நாம் தெய்சேயில் ஒன்று கூடி நாம் இந்த மூன்று ஆண்டுகளில் கற்றுக்கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி புதிய எழுச்சியை உருவாக்க இருக்கிறோம்.
 
இது ஒரு மிகச்சிறந்த செயல்பாடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. வரலாற்றில் நாம் நம்பிக்கையான மற்றும் எளிய வாழ்வின் மூலமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களை பார்க்கிறோம்.
 
ஓருமைப்பாட்டில் வாழ்வது என்பது நமது உள்வாழ்வு சம்பந்தப்பட்டது. சிலருக்கு இது அமைதி மற்றும் செபமாக இருக்கலாம்.

JPEG - 27.1 kb


ஏன் ஒரு பதிய ஒருமைப்பாடு?

புதிய ஒருமைப்பாடு பழைய ஒருமைப்பாட்டுக்கு எதிர்பதம் அல்ல. இது நம்பிக்கைகொண்டவர்களை புதிய நிலைக்கு எடுத்துச்செல்லும் புத்துணர்ச்சியைக் குறிக்கிறது. எசாய இறைவாக்கினர் இவ்வாறு கூறுகிறார்:
’முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்ளூ முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்ளூ இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்’ (எசா. 18-19). கிறிஸ்தவ பார்வையில் ஆண்டவரின் பிறப்பு என்கிற மறைபொருளில் இது ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறது. கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பியதின் மூலமாக கடவுள் இந்த உலகத்தோடு உள்ள ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். இன்று நாம் கடவுளிடமிருந்து கிறிஸ்துவழியாக பெற்றுக்கொள்வதையும், புதியதாக நாம் எதைப் பெறுகிறோமோ அதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஷதன்னுடைய சிலுவை மற்றும் உயிர்ப்பு வழியாக கிறிஸ்து மனிதர்களோடு புதிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார். இதில் பிளவுபட்ட மனித சமுதாயம் வெல்லப்பட்டது. அவரில் அனைவரும் இணைந்து ஒரே குடும்பத்தை உருவாக்குகிறோம்ஷ (கடிதம் 2012). உயிப்பின் ஒளியில், சிலுவையில் நிறைவடையும் இயேசுவின் வாழ்வு முழுவதும் மனித இனத்தோடு அவர் மேற்கொண்ட மிகப்பெரிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இது கடவுளிடம் தொடங்குகிறது.


புதிய ஒருமைப்பாடு எல்லா வயது மற்றும் எல்லா பின்னனியை கொண்ட அனைவரையும் நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பையும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த அழைக்கிறது. இந்த தேடலில் ஒரு சிறப்புப் பார்வை கொண்டிருப்பது இந்த முயற்ச்சிக்கு எதிர்ப்பு அல்ல மாறாக அது கூடுதல் சிந்தனையைத்தான் கொடுக்கும். ஒரு நாள் சகோதரர் அலோய்ஸ் ஒப்புரவு ஆலயத்தில் கூடியிருந்த இளைஞர்களுக்கு இவ்வாறு சொன்னார்:

ஒரே ஒரு குடும்பம், ஆனால் பல பிரிவுகள் என்கிற நிலைப்பாட்டை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
 
தாராள உள்ளத்தோடு தன்னையே கொடுக்கும் எண்ணற்ற மக்களை நாம் நினைத்துப் பார்ப்போம். தாழ்ச்சியோடு தனது வாழ்வைக் கொடுக்கும் நமக்கு தெரிந்தவர்கள் மற்றும் நமக்கு தெரியாதவர்களுக்காக செபிப்போம். அவர்கள் இந்த சமுதாயத்தின் ஆன்மாவாக உள்ளார்கள். அவர்களால் நம்பிக்கை இன்னும் இந்த உலகில் ஒளிர்கிறது. அவர்கள் தீமையை விட நன்மைதனம்தான சிறந்தது என்பதற்கு சாட்சிகள்.
இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 30 அக்டோபர் 2012

அடுத்த தலைப்புகள்

  • புலம்பெயர்ந்தவர்களை வரவேற்பது
  • பல்சமய உரையாடல்
  • உலக அளவில் சிறுபான்மை இனத்தை மதிப்பது இது சம்பந்தப்பட்ட சிந்தனைகளை பகர நஉhழநளளூவயணைந.கச என்கிற மின் அஞ்சலை பயன்படுத்தலாம்.

இது சம்பந்தப்பட்ட சிந்தனைகளை பகர echoes taize.fr என்கிற மின் அஞ்சலை பயன்படுத்தலாம்.