TAIZÉ

ஓன்று சேர்ந்து வாழும் வாழ்க்கை

தேசே பற்றி

 

தேசே அதன் தொடக்கம்

எல்லாமே ஏகாந்த தனிமையில் தொடங்கியது 1940 – ஆம் ஆண்டு தனது 25 வது வயதில் அருட்சகோதரர் ரோஜர் தன் தொந்த நாடான சுவிஸ்ட்சர்லாந்தை விட்டு தன் அன்னையின் நாடான பிரான்சில் குடியேறினார். பல ஆண்டுகளாக அவர் எலும்புருக்கி நோயினால் அவதிப்பட்டு உடல் பலவீனமாக இருந்தார். இந்த நீண்டகால நோயின் போது தான், ஒரு அக அழைப்பு அவருக்குள் உருவானது. அதன்படி எளிமையும், இரக்கமுள்ள இதயத்தன்மையும் கொண்ட நற்செய்தி மெய்மையை அவசியமான வாழ்க்கை முறையாக கொண்டதொடு குழுமத்தை உறுவாக்கிட வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.

இரண்டாம் உலக போர் ஏற்பட்ட போது உடனடியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று உறுதியான முடிவுஎடுத்தார். முதல் உலகப் போரின் போது தன் பாட்டி பிறர்க்கு உதவியது போல் இந்த பேரின் விளைவாக கடினமான துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆர்வம் கொண்டார். எனவே பிரான்ஸ் நாட்டை இருபகுதியாக பிரித்த எல்லைக் கோட்டின் அருகே இருந்த தெய்சே கிராமத்தை தேர்ந்தேடுத்தார். இது போரினால் புகலிடம் தேடி ஒடி வருகின்ற அகதிகளை வரவேற்க கூடிய இடமாக அமைந்திருந்தது. லியோனில் இருந்த நண்பர்களுக்கு அடைக்கலம் தேடும் அகதிகளுக்கு தெய்சேவின் முகவரியை மகிழ்வுடன் கொடுத்தனர்.

சகோதரர் ரோஜருக்கு கடனுதவி கிடைக்க, பல வருடங்களாக யாருமே குடியிராக ஒரு வீட்டை தெய்சேவில் விலைக்கு வாங்கினார். தன் உடன் பிறந்த சகோதரிகளில் ஒருவரான ஜெனிவியிலியை வருபவர்களை உபசரிக்க உதவ வருமாறு அழைத்தார். அகதிகளில், யுதர்களுக்கு அடைக்கலம் அடைந்தனர். பொருள் தேவைகள் குறைவாக இருந்தது, குடிநீர் பெற கிராம கிணற்றுக்கு போக வேண்டும், சாதாரணமான உணவு, குறிப்பாக அருகிலுள்ள மாவரைவு ஆலையிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட மக்காசோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட “சூப்” போன்ற சத்து பானங்கள் வழங்கப்பட்டது.

JPEG - 10.1 kb

தேசேவில் அடைக்கலம் தேடிவந்தவர்களுக்கு எந்த விதமான கஷ்டமும் தரக்கூடாது என்பதில் கவனமாக இருந்த சகோ. ரோஜர் தனிமையில் சென்று செபித்தார். தேசே இல்லத்திற்கு அருகேயுள்ள காட்டு பகுதிக்கு சென்று இறைபுகழ் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் யூதர்கள், அக்னோஸ்டிக்ஸ் மற்றும் வேறு மதத்தினருக்கு அந்நிய சூழ்நிலை உணர்வு ஏற்படுவதை தவிர்க்கலாம். அவரவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் இடத்திலிருந்தே செபிக்கலாம் என சகோ. ரோஜரின் சகோதரி அனைவருக்கும் ஆறுதலாக இருந்தார்.

சகோ. ரோஜர் பெற்றோர்கள் தங்களின் மகனும், மகளும் ஆபத்தில் இருக்கிறார்கள் என அறிந்து ஓய்வு பெற்ற இரானுவ வீரரான தங்கள் குடும்ப நண்பர் ஒருவரிடம் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்மென கேட்டார்கள். அவரும் அதை பொறுப்பாக செய்தார். 1942-ல் தேசே இல்லம் பற்றி எதிரிகள் கண்டு பிடித்துவிட்டதாகவும், சகோ. ரோஜர் உள்பட அனைவரும் தப்பித்து உடனே வெளியேற வேண்டும் என்று அந்த குடும்ப நண்பர் எச்சரித்து, அனைவரும் வெளியேறச் செய்தார். பின்னர் 1944-ம் ஆண்டு தான் சகோ. ரோஜர் தெய்சே திரும்ப முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் சிலர் அவருடன் இணைந்தனர். ரோஜருடன் அந்த சகோதரர்களும் இணைந்து தொடர்ந்து தேசேவின் தங்கள் பணிவாழ்வை தொடங்கினர்.

குழுமம்

போரினால் அனாதையான இளையோருக்கு 1945-ல் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார் ஒரு இளைஞர். அவர் அவர்களை தெய்சே இல்லத்திற்கு கொண்டு வர விரும்பினார். சகோ. ரோஜர் அவர்களை கவனிகத்துக்கொள்ள தன் சகோதரியை கேட்டுக் கொண்டார். அவள் அவர்களுக்கு தாயானார், அருகிலிருந்து முகாமில் கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த ஜெர்மனிய போர் கைதிகளை ஞாயிற்றுக் கிழமைகளில் தெய்சேவுக்கு வரவேற்றனர். படிப்படியாக இளைஞர்கள் தெய்சே குழுமத்தில் வந்த இணைய தொடங்கினர். தெய்சே சகோதரர்கள் குழுமம் வளர்ந்தது. 1949 ம் ஆண்டு ஈஸ்டர் திருநாளின் போது அருட்சகோ. ரோஜரும், அவர் தொடங்கிய குழுமத்தில் இணைந்த முதல் சகோதரர்களும் துறவற வாழ்வை குழும வாழ்வை எளிமையான வாழ்வை வாழ வாக்குறுதி எடுத்தார். 1950 –ம் ஆண்டு முதல் சில சகோதரர்கள், ஏழைகளின் வாழ்வை அனுபவத்தில் கண்டுணர, பகிர்வு வாழ்வு வாழ, ஒன்றுமையில்லாத புறக்கணிக்கப்பட்ட பகுதியின் ஏழைகளோடு வாழத் தொடங்கினார்.

இன்று கத்தோலிக்கர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள், 25க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து தேசே குழுத்தில் இருக்கின்றனர். இந்த குழுமம் இருப்பதே பிரிந்திருக்கும் கிறிஸ்துவர்களிடையே மற்றும் பிரிந்திருக்கும் நாடுகளிடையே ஒப்புறவு உண்டாக்கும் அறிகுறியாக உள்ளது.

இந்த தேசே சகோதரர்கள் நன்கொடையோ அல்லது பரிசுப் பொருட்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு வேளை எந்த சகோதரரோ தன் குடும்பத்திலிருந்து தன் பங்கை பொறுவாரானால் அது தெய்சே குழுமத்திற்கு ஒப்படைக்கப்பட்டு ஏழைகளுக்கு தரப்படும். சகோதரர்களின் உழைப்பாலேயே இந்த குழுமத்திற்கு வருமானம் கிடைக்கிறது.

1950 களிலேயே தேசே சகோதரர்கள் வளர்ச்சியும், முன்னேற்றமும் இல்லாத இடங்களுக்கு சென்று, வறுமையும் பிரிவினையும் ஆட்டி படைக்கின்ற துன்புறும் மக்களிடையே வாழத் தொடங்கினர்.

இன்று ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பகுதிகளில் சிறிய குழுவாக சகோதரர்கள் வாழ்கின்றனர். முடிந்தவரை தங்கள் வாழுமிடத்திலிருப்போரை வாழ்க்கை முறையையே பின்பற்றி வாழ்கின்றனர். மோசமான ஏழைகளிடையே, சாலையோர சிறார்கள் சிறையில் வாடுவோர், மரணித்துக் கொண்டிருப்போர், முறிந்த உறவுகளால் மன ஆழத்தில் காயமடைந்தோரிடையே மற்றும் கைவிடப்பட்டோரிடையே அன்பின் பிரசன்னமாக இருக்க முயல்கின்றனர்.

திருச்சபை தலைவர்கள் தேசேவுக்கு வருகை தருகின்றனர். திருத்தந்தை 2-ம் ஜான்பால் அவாகளை காண்டர்பரி மற்றும் ஆந்தடெக்ஸ் மேட்ரோபாலிடன்ஸ் பேராயர்கள் மூவர், சுவிடனை சேர்ந்த 14 லூத்ரன் ஆயர்கள் மற்றும் உலக முழுவதிலிருந்து எண்ணற்ற போதகர்கள், குருக்கள், ஆகியோரை இந்த தெய்சே குழுமம் வரவேற்றிருக்கிறது.

ஆண்டுகள் உருண்டோட தேசேவுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்த உயர்ந்து கொண்டேயிருக்கின்றது. 1950 களில் இறுதியில் 17-30 வயதிற்குள் இருந்த இளையேர்கள் பெரும் அளவில் தெய்சேவிற்கு வருகை புரிந்தனர்.

1966-ல் 7-ம் நூற்றாண்டு சபையான புனித ஆண்ருவின் அருட்சகோதரிகள் என்ற சர்வதேச கத்தோலிக்க குழுமம் தெய்சே கிராமத்தின் பக்கத்து கிராமத்தில் தன் இல்லத்தை தொடங்கியது. அவர் தேசே கூட்டங்களின் வேலையில் ஒரு பகுதியை மேற்கொண்டு செய்தார். சமிபகாலத்தில் போலிஷ் உர்சுலைன் அருட் சகோதரிகள் அங்கு வந்து தேசே குழுத்திக்கு உதவியாக இருக்கின்றனர்.

1962 ஆம் ஆண்டு முதல் சகோதரர்களும் இளம் நபர்களும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, தொலை நோக்குடன் தங்களது எல்லைக்கு வெளியே வரமுடியாதர்வகளிடம் சென்று நெருக்காமல் இருக்க வாழ செய்சேவால் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போது பிரிக்கும் சுவர் விழுந்து விட்டது. கிழக்கிற்கும், மேற்கிற்கும் பயணம் மேற்கொள்வது எளிதாக உள்ளது. பாரம்பரிய (பழமைவாத) மத கோட்பாடு நம்பிக்கையுடை (ஆர்த்தடெக்ஸ்) கிறிஸ்துவர்களிடம் தொடர்பு வைப்பது எப்போதும் முக்கியமானதாகவும் தொடர்பு வைப்பது எப்போதும் முக்கியமானதாகவும் குறிப்பிட்ட தனிச்சிறப்புடையதாகவும் இருக்கிறது.

JPEG - 112.4 kb

அருட்சகோதரர் ரோஜர் 16 ஆகஸட் 2005-ம் ஆண்டு, அவர்க்கு 90 வயது, இறவு நேர செபத்தில் இருந்த சமையித்தில் கொல்லபட்டார். சகோதரர் அலோஸ், அவரை அருட்சகோதரர் ரோஜர் பல ஆண்டுகள் முந்தி அவரை திருமட முதல்வர் ஆக தேர்ந்து எடுத்தார்.

இளம் வாலிபர்களுக்கு கண்டங்களுக்கிடையேயான கூட்டங்கள்

இளவேனிற் காலம் முதல் பின் இலையுதிர் காலம்வரை ஒவ்வொரு வாரமும், பல்வேறு நாடுகளிலிருந்து இளம் வயதினர் தேசே மலைக்கு வருவார்கள். மற்றவர்களோடு சேர்ந்து தோழமையிலும் உறவிலும் அவர்கள் தங்கள் வாழ்கையின் அர்த்தத்தை தேடுகிறார்கள். இறைவன் மேல் நம்பிக்கை என்ற நீருற்றுக்கு செல்வதால், மனிதர்களிடையே நம்பிக்கையின் உறவை கட்டியெழுப்ப ஊக்கம் தருகின்ற உள்நிலை திருப்பயணத்தை தொடங்குகிறார்கள்.

கோடை மாதங்களின் சில வாரங்களில் 75 நாடுகளிலிருந்து சுமார் 5000 இளம் ஆண், பெண்கள் இந்த பொது அனுபவத்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பியபின்பும் இந்த அனுபவர் அவர்களுக்கு தொடர்கிறது. இது வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்த உலகை உருவாக்கிட பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தங்கள் தயார் நிலையையும் மற்றம் அகநிலை வாழ்வை ஆழப்படுத்த அவர்களின் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்து, “ஆம்” என்று கூறுவதான் மூலம் அவரை பின்பற்ற உறுதிபாடுடைய சகோதரர்களின் குழுமத்தால் தெய்சேவிற்கு வரும் மக்கள் வரவேற்க்கப்படுகின்றனர். அருட்சகோதரிகளும் இந்த பணியில் பங்கேற்கின்றனர். ஒரு நாளுக்கு மூன்றுமுறை, அங்குள்ள அனைவரும் சேர்ந்து அமைதியிலும், பாடல்களிலும் இணைந்து இறைவனை வழிப்படுகின்றனர். ஓவ்வொரு நாளும் குழுமத்தின் சகோதரர்கள் விவிலிய அறிமுகவுரை மற்றும் முன்னுரை தருகின்றனர், அதை தொடர்ந்து சிந்தனை நேரம் மற்றும் கலந்துரையாடல் நடக்கிறது. இதில் பங்கேற்பாளர்களும் உதவி செய்கின்றனர்.

JPEG - 20.9 kb

ஒருவரது வாழ்வில் மிக ஆழமாக நற்செய்தியை புரிந்து கொள்ளவும், அதை உள்வாங்கி கொள்ளவும் கூடிய வழியாக அவர் அமைதியில் ஒரு வாரக் காலத்தை செலவிடலாம். விசுவாசத்தின் நீரூற்றுகளுக்கும் சம காலத்திய சமூதாயத்தின் பண்முக மெய்மைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த குறிப்பிட்ட தலைப்புகளில் குழு குழுவாக கலந்துரையாட மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தலைப்புகள் “மண்ணிப்பு சாத்தியமா?” “உலகமயமாக்களின் சவால்கள்”, இறைவனின் அழைப்பிற்கு நாம் எவ்வாறு பதில் தருவது. எப்படிப்பட்ட ஐரோப்பியவை நாம் விரும்புகின்றோம்?” போன்று இருக்கும். மேலும் கலை மற்றும் இசை தொடர்பாதையாகவும் இந்த கலந்துரையாடல் தலைப்புகள் இருக்கலாம்.

தேசேவில் செலவிடுகின்ற ஒருவாரம் இறைவனோடுள்ள உறவின் அனுபவம் மற்றும் இன்னொரு பக்கம் தனிப்பட் சிந்தனை அனுபவத்திற்கும், மக்களிடையே உள்ள கூட்டொற்றுமை மற்றும் தோழமையின் அனுபவத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவை உணர்ந்து கௌ;ளக்கூடிய ஒரு வழியாகும்.

உலகெங்குமிருந்து வருகின்ற இளையோர்களை திறந்தமனம் மற்றும் செவிமடுத்தல் என்ற சுழலில் சந்திப்பதின் மூலம் கிறிஸ்துவ பாரம்பரியங்கள் மற்றும் சலாச்சாரங்களின் பல்வகையான மையத்தில் தான் அற்றுமையின் பாதை திறக்கப்படுகிறது என்று பங்கேற்பாளர்கள் கண்டு பிடிக்கின்றனர். தனிமை வன்முறை, பிரிவுகளால் காயப்பட்டிருக்கின்ற உலகில் அமைதி மற்றும் நம்பிக்கையை உருவாக்குபவர்களிடையே உறுதியான அடிப்படையை இது தரும்.

இளையோர்களுக்காக ஆதரவு தர இந்த குழுமம் “இந்த உலகில் நம்பிக்கையின் பயணத்தை” தொடங்கியிருக்கிறது. அப்படியெனில் இது இந்த குழுமம் ஏற்பாடு செய்கின்ற ஒரு இயக்கமா? இல்லை, இதற்கு ஒவ்வொரு நபரும் தெய்சேவில் தங்கிய பிறகு தனிப்பட்ட விதத்தில் இவர்களை போலவே தேடுதலில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்களோடு உள்ள ஒன்றிப்பால், அகநிலை வாழ்வின் பெரும் விழிப்புணர்வுடன், அவரவர்கள் வாழும் சூழ்நிலைக்குள்ளேயே வாழ அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 16 டிசம்பர் 2005

ஆண்டவராகிய கிறிஸ்துவே எங்களையும், நீர் எங்களிடம் ஒப்படைத்தவர்களையும் ஆசிர்வதியும். எங்களை,
பேரின்ப அருளில்,
மகிழ்சியில்,
எளிமையில் மற்றும் இரக்கமுள்ள அன்பியம் எழுச்சியுணர்வில் வைத்தருளும்.

தேசேவின் விதிகள்