அருட்சகோதரர் ரோஜர், 1940-ல் தெய்சே குழுமத்தை ஏற்படுத்த ஜெனிவாவை விட்டு புறப்படும் முன் ஒப்புரவு என்ற உள்ளுணர்வினால் உந்தப்பட்டார். மனித குலத்தின் அமைதிக்காக ஏங்கும் கிறிஸ்துவர்களின், கடைசி நேரம் வரை ஒப்புரவை தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு பின், இதை தன் தனிப்பட்ட பயணம் என்ற தலைப்பின் அவர் இவ்வாறு விவரிக்கிறார்.
என் பாட்டியின் வாழ்கை சான்றினால் பண்பேற்றப்பட்ட நான், அவரை பின்பற்றி, என் மரபுவழி முதல்நிலை விசுவாசத்திற்கும் கத்தோலிக்க விசுவாசத்தின் மறைபொருளுக்கும் இடையே, எனக்குள்ளேயே ஒரு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதினால் யாரையும் புண்படுத்தாமல், எனது சுய கிறிஸ்துவ அடையாளத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன்.
அருட்சகோரர் ரோஜர் திறந்து வைத்த இந்த பாதையில் பயணிக்க ஒரு சாமாத்தியம் தேவை. இதில் சில விஷயங்கள் வற்புறுத்தப்படுகின்றன. இன்னும் நாம் இதை ஆய்வு செய்து முடிக்கவில்லை. கிறிஸ்துவில் நாம் ஒருவருக்கொருவர் உரியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவர்கள் பிரிக்கப்பட்டால், நற்செய்தி யாருக்கும் கேட்க முடியாமல் போய்விடும்.
சமுதாயத்தின் புதிய சவால்களுக்கு நாம் எப்படி பதிலளிக்க போகிறோம்? குறிப்பாக, மத உட்பிரிவுகள், கலாச்சாரங்களுக்குள் இருக்கும் பரஸ்பர புரிதல், ஆகியவைகளில் எல்லா கிறிஸ்துவ குடும்பங்களில் தூய ஆவி வைத்துள்ள கொடைகளை, ஒன்றிணைக்காமல் இணக்கம் எப்படி சாத்தியம்? நாம் பிரிந்திருந்தால் கிறிஸ்துவின் சமாதானத்தை எப்படி எடுத்து சொல்லவோ, செயலில் காட்டவோ முடியும்?
கிறிஸ்துவர்களுக்குள்ளேயே எதிர்ப்பு காட்டவே அதிகமாக ஆற்றலை, இனியும் வீனாக்கி கொண்டிருக்க வேண்டாம். சில சமயங்களில் நமது மத உட்பிளவுகளுக்குள்ளே பிரச்சனைகள். இறைவனை போற்றுவதிலும், அவரின் அமைதியிலும் அனைவரும் அவர் முன்னிலையில் ஒன்றிணைந்து அவரின் வார்த்தையை கேட்போம்.
மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது நாம் வாழும் நகரங்கள் கிராமங்கள் (அ) பகுதிகளில் உள்ள மக்களை, இரவு விழிப்பு வழிப்பாட்டிற்கு வந்து பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம். [1]
இந்த வழிப்பாட்டிற்கு தயாரிக்க, இளையோர்களை மற்றவர்களிடம், இன்னொரு பங்குதலத்திற்கு, இன்னொரு சபைக்கு, இன்னொரு இயக்கம் (அ) குழுவிற்கு அனுப்பி, விசுவாசத்தை தேடிக்கொண்டிருக்கும் இளையோர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
அப்போது தான் நாம் செய்கின்ற அனைத்து செயல்களோடும் நாம் விருப்பங்கள் வளரும். நம்மை எது பிரிக்கிறது என்பதை விட எது ஒன்றிணைக்கிறது என்பது தான் முக்கியம். இந்த மெய்மை நமது வாழ்வில் ஒளிர வேண்டும்.
வௌவேறு கிறிஸ்துவ பாரம்பரியங்களுக்கிடையே கொடைகளின் பரஸ்பர பரிமாற்றம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதை நெய்சேவில் நடக்கும் ஒன்றிணைந்து செபிப்பதிலும், தனிப்பட்ட சந்திப்புகளிலும் காண்கிறோம். மனப்பக்குவ மதிப்பீடு வளர்கிறது. மேலும் இந்த பரிமாற்றம் இயல்பாகவே நடைப்பெறுகிறது.ஒவ்வொரு கிறிஸ்துவ பாரம்பரியத்தினாலும் விசுவாச மறைப்பொருளின் சில தன்மைகள் ஒன்றாக வளர்கின்றது.கிழக்கிந்திய கிறிஸ்துவர்கள் வலியுறுத்தும் கிறிஸ்துவின் உயிர்ப்பு, ஏற்கனவே உலகை மாற்றிக்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் நாம் இதனால் துயரம் அடையவில்லை. திருச்சபை தந்தையர்களின் படிப்பினையை கிழக்கத்திய கிறிஸ்துவம் மிகுந்த பற்றோடு பாதுகாத்து வருகிறது. சமய நோண்புடன் வாழும் துறவி மடம் என்ற வாழ்க்கை முறையை கிழக்கத்திய கிறிஸ்துவம் தான் மேற்குக்கு அளித்து, திருச்சபை முழுவதிற்கும் தியான சிந்தனை வாழ்வை அறிமுகப்படுத்தியது. எனவே மேற்கத்திய கிறிஸ்துவர்கள், இத்தகைய செல்வதிற்கு திறந்த மனத்தோராய் இருக்க வேண்டாமா?சீரமைவு கிறிஸ்துவர்கள் இந்த நற்செய்தி உண்மைகளை வலுவாக, அமுதமாக வலியுறுத்துகின்றனர். இறைவன் தன் அன்பை இலவசமாக, நிபந்தனையற்று தருகிறார். இதை வார்த்தைகளை கேட்டு நடப்போரிடம், அதன் மூலம் அவர் வருகிறார். விசுவாசத்தின் எளிய நம்பிக்கை இறைவனின் மக்கள் என்ற விடுதலைக்கு நம்மை அழைத்து செல்கிறது. ஓன்றிணைத்து பாடும்போது இறைவார்த்தை நம்மில் ஊடுருவுகிறது. இந்த மதிப்பீடுகள் எல்லா கிறிஸ்துவர்களுக்கும் இன்றியமையாததல்லவா?கிறிஸ்துவில் உள்ள உறவின் பரவலான பல்நிலை தன்மையை வரலாறு முழுவதும், கத்தோலிக்க திருச்சபை பார்ப்பதற்கு தெளிவாகவே வைத்திருக்கிறது. இது தொடர்ந்து, உள்ளுர் திருச்சபைக்கும், அகில உலக திருச்சபைக்கும், சமநிலையை காண்கிறது. ஒன்றைவிட்டு இன்னொன்று இருக்க முடியாது. எல்லா நிலைகளிலும் இந்த உறவின் இறை ஊழியம் விசுவாசத்தில் ஒருமுகப்போக்கை கொண்டிருக்க உதவுகிறது. இந்த ஊழியத்தின் வளர்ச்சி புரிதலை நோக்கி திருமுழுக்கு பெற்ற அனைவரும் செய்யமுடியாதா?ஊட்பிரிவுகளுக்கும் அப்பால், வளர்ச்சிக்காக, கண்டங்களுக்கிடையே கொடை பரிமாற்றங்கள் அவசரத் தேவையாக உள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் பிற கண்டத்தில் இருக்கும் கிறிஸ்துவர்களிடமிருந்து எவ்வளவோ பெறலாம். இதற்கு பதிலாக அந்த திருச்சபைகளிடமிருந்து எவ்வளவோ பெறலாம். இன்று கண்டங்களுக்கு இடையே அவர்கள் நற்செய்தி உற்சாகத்தை பகிர்ந்துக் கொள்ளலாம்.கிறிஸ்துவின் மறைசாட்சியர்களும், சான்றுகளும் இந்த உறவை நோக்கியே நம்மை வழிநடத்துகின்றனர். அவர்கள் நமது நம்பிக்கை, நமது தீர்மானத்திற்கு ஊட்டமளித்து, கிறிஸ்துவர்களிடையே காணக்கூடிய தெளிவான ஒற்றுமையை தேடி கண்டுபிடிக்க செய்கிறார்கள்.