புதிய ஒருமைப்பாட்டை நோக்கி
கடந்த முப்பது ஆண்டுகளாக சகோதரர் ரோஜர் மற்றும் தெய்சே குழுமத்தால் தொடங்கப்பட்ட ’பூமியில் நம்பிக்கை திருப்பயணம்’ உலகம் முழுவதும் பல நாடுகளில் தொடர்ச்சியாக கூட்டங்களை சிறிய மற்றும் பெரிய அளவில் நடத்திவருகிறது.
டீசம்பர் 2011 இறுதியில் பெர்லினில் சகோதரர் அலோய்ஸ் புதிய ஒருமைப்பாட்டை பற்றிய சிந்தனைகளைக் கொடுத்து இந்த திருப்பயணத்தைத் தொடங்கி வைத்தார். இது இளைய சமுதாயத்திற்கு தனது சக்தியை ஒருமுகப்படுத்தவும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள், புதிய சிந்தனைகள் மற்றும் அனுபவங்களை ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கும், இந்த தேடல் ஆகஸ்டு 2015ல் தெய்சேயில் நிறைவடையும்.
இன்று சில இளைஞர்கள் நாம் எப்படி அடுத்தவர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் புதுப்பிக்கலாம் என்கிற கேள்வியை தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த திருப்பயணம் இவ்வாறு பகிரப்பட்ட ஆர்வங்களை எதிரொலிக்கவும், செபக் குழுக்களுக்கு புதிய சக்தியை கொடுக்கவும், இன்றைய உலகம் கொடுக்கும் சவால்களை பொது சிந்தனையாக மாற்றவும் விரும்புகிறது. இந்த இணைய தளம் இளைஞர்கள் கொடுக்கும் சாட்சிகயங்களையும் செபக்குழுக்களுக்கு சில பரிந்துரைகளையும் தாங்கி வருகிறது.