TAIZÉ

தேசே சமூகம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசேவில் 1940-ம் ஆண்டு ஒரு சர்வதேச அனைத்து கிறிஸ்துவ சமய கழுமம் அருட்சகோ ரோஜர் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள், 25க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து தெய்சே குழுத்தில் இருக்கின்றனர்.

சகோதரர்கள் ஏழைகளின் வாழ்வை அனுபவத்தில் கண்டுணர, பகிர்வு வாழ்வு வாழ, ஒன்றுமையில்லாத புறக்கணிக்கப்பட்ட பகுதியின் ஏழைகளோடு வாழத் தொடங்கினார். இந்த தெய்சே சகோதரர்கள் நன்கொடையோ அல்லது பரிசுப் பொருட்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. சகோதரர்களின் உழைப்பாலேயே இந்த குழுமத்திற்கு வருமானம் கிடைக்கிறது.

1950 – ம் ஆண்டு இறுதியல் தேசேவுக்கு வரத் தொடங்கிய இளையோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1962 –ம் ஆண்டு முதல் சகோதரர்களும், தேசே குழுதத்தால் அனுப்பப்பட்ட இளம் வயதினரும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ச்சியாக சென்று வந்தனர்.