TAIZÉ

செபநேரத்திற்கு தயாரித்தல்

 

“எவ்வாறு நாம் ஒன்று சேர்ந்து செபித்துக் கொண்டேயிருப்பது” தெய்சேவில் தங்கிய பின்பு அல்லது தெய்சேவிற்கு வெளியே அதன் கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு மக்கள் கேட்கும் கேள்வி தான் இது.

தொடக்கமும் முடிவும் அற்ற மற்றும் ஆழ்ந்து சிந்தித்தல் என்ற பண்பைக் கொண்டிருக்கின்ற செபத்தை தயாரிக்கின்ற சில அதிமுக்கியம் வாய்ந்த அடிப்படையை தன்மைகளை இங்கு காணலாம்.

செபத்தை தொடங்க ஒன்று அல்லது இரண்டு புகழ்பாடல்களை தேர்ந்தெடுக்கலாம்.

சங்கீதம்

நீண்ட கால பழக்கவழக்கத்தில் உள்ள தன் மக்களின் செபங்களை இயேசு செபித்தார். கிறிஸ்துவர்கள் எப்போதுமே அவைகளில் வாழ்வின் நீருற்றை கண்டனர். சங்கீதங்கள் நம்மை, எல்லா விசுவாசிகளின் தோழமை உறவில் வைக்கிறது. நமது மகிழ்ச்சிகள் துயரங்கள், இறைவன் மூலம் நமக்குள்ள நம்பிக்கை, நமது தாகம் மற்றும் நமது தாங்கொண்ணா மன வேதனையாவும் சங்கீதங்களில் வெளிபட்டிருகின்றன.

ஒருவர் அல்லது இருவா மாறி, மாறி சங்கீதத்தின் வசனங்களை படிக்கலாம் அல்லது பாடலாம். ஓவ்வொரு வசனத்திற்கு பின்பும் எல்லோரும் அல்லேலூயா என்றும அல்லது வேறொரு புகழ்பா வாடி பதிலுரை தரவேண்டும். வசனங்கள் பாடபட்டால் அது சாதாரணமாக இரண்டு வரிகளை கொண்டதாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தனியாக வசனங்கள் பாடிக் கொண்டிருக்கையில் சபையினர் புகழ்ப்பாவின் இறுதி சேர்ந்திசையை மென்மையாக ரீங்கார ஒலியாக இசைக்கலாம். வசனங்கள் படிக்கப்பட்டால் அது சற்று நீளமாக இருக்கலாம். சங்கீதம் முழுவதும் படிக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. எப்போது பொருத்தமான வரிகளை எடுத்து ஒருசில வசனங்களை தேர்ந்தெடுக்க தயங்க வேண்டாம்.

மறையேடு

மறையேடுகளை படிப்பது என்பது மனிதர்களின் தாகத்தை தணிக்க இறைவனே தருகின்ற வற்றாத நீருற்றை நோக்கி சொல்கின்ற வழியாகும் “இறைவனின் வார்த்தையில், இறைவனின் இதயத்தை கண்டு பிடிக்க செய்கின்ற மனித படைப்புகளுக்கு இறைவனிடமிருந்து வந்த கடிதம் தான் விவிலியம்”. (பெரிய கிரகோரி 6-ம் நூற்றாண்டு)

தவறாமல் தொடர்ந்து செபிக்கும் குழுமம், முறையான வகையில் விவிலியம் படிப்பதை ஒரு பழக்க வழக்கமாகவே கொண்டிருப்பார்கள். அனால் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை நடக்கும் செபக் கூட்டங்களில் சரியான வாசகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் செபத்தின் அல்லது அந்த செப அமர்வின் மையக் கருத்தோடு பொருத்தமானதாக இருக்க வேண்டும். ஓவ்வொரு வாசகத்திற்கு முன்பும், புனித... நற்செய்தியிலிருந்து வாசகம் (அ) ... நூலிலிருந்து வாசகம் என்று கூறவேண்டும். இரண்டு வாசகங்களை தேர்ந்தெடுப்பதாக இருப்பின், முதல் வாசகம், பழைய ஏற்பாடுகள், திருதூதர் மடல்கள். திருத்தூதர் பணிகள், திருவெளிப்பாடு, ஆகியவைகளிலிருந்தும், இரண்டாம் வாசகம் நற்செய்தியிலிருந்தும் எடுக்க வேண்டும். வாசகங்களுக்கு இடையில் தியானப் பாடல்கள் பாடலாம்.

வாசகங்கள் வாசிக்கபடுவதற்கு முன்பும் (அ) வாசிக்கப்பட்ட பின்பும் கிறிஸ்துவின் ஒளி என்று பொருள்படுகின்ற பாடலை பாடுவது நல்லது. இந்தப் பாடல் பாடப்படும் போது அங்குள்ள விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் விளக்கை சிறார்கள் (அ) இளையோர்கள் மெழுகு திரி கொண்டு தீ ஏற்றலாம். இரவு எவ்வளவு இருளாக இருப்பினும் நமது சொந்த வாழ்க்கை (அ) மனித வாழ்வு இருண்டாலும், கிறிஸ்துவின் அன்பு என்ற தீ எப்போதும் அணையாது.

பாடல்

தியனம்

நாம் இறைவனோடுள்ள உறவை வார்த்தைகளில் வெளிப்படுத்த முயலும் போது, நமது எண்ணங்கள், விரைவாக குறுகிவிடலாம். ஆனால் நமது உயிரின் ஆழத்தில், தூய ஆவியின் வழியாக நமது கற்பனைகளுக்கும் அப்பால், கிறிஸ்து செபித்துக் கொண்டிருக்கின்றார்.

இறைவன் நம்மோடு தொடர்பு கொள்ள முயல்வதை எப்போதும் நிறுத்துவதில்லையென்றாலும். இது வற்புறுத்தப்படுகின்றதாக இல்லை. இறைவனின் குரல் அதிகமாக மெல்லிய சிற்றொலியில், அமைதியின் மூச்சி காற்றில் தான் கேட்கிறது. தூய ஆவிக்கு திறந்தவர்களாக, அமைதியில் இறைப்பிரசன்னத்தில் இருப்பதே செபமாகி விடுகிறது.

உங்களுக்குள் வெற்றிடத்தை உருவாக்கும் சில யுக்திகளை பயன்படுத்தி பின்பற்றப்படுவதால், எப்படியாயிலும், அடையப்பெறுகின்ற உள் அமைதி என்பது ஆழ்தியான சிந்தனைக்கான வழி அல்லது மாறாக ஒரு குழந்தையின் நம்பிக்கையோடு நமக்குள் கிறிஸ்துவை அமைதியாக செபிக்கவிட வேண்டும். அப்போது நமது உயிரின், இருத்தலின் ஆழம் பிரசன்னத்தால் வாழிடமாகிறது என்பதை ஒரு நாள் நாம் கண்டுணர்வோம்.

மற்றவர்களோடு சேர்ந்து செபத்தில் ஈடுபடும் போது, சிறு சிறு அமைதி (செப) நேரங்களுக்கு (2-3 நிமிடம்) பதிலாக, ஒரு நீண்ட அமைதி (சப) நேரத்தை (5-10 நிமிடங்கள்) வைக்கலாம். அமைதியான சுழல் செப நேரம் பழக்கமில்லாதவர்களுக்கு செபிக்க தொடங்கும் முன்பே இதை பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லாலாம் அல்லது பாடல் முடிந்தவுடன் “இப்போது சில நிமிட அமைதியோடு செபம் தொடரும்” என்று அறிவிப்பு செய்து அமைதி செபம் தொடங்கலாம்.

மன்றாட்டு (அ) புகழ்ச்சி மன்றாட்டு மாலை:

சிறு விண்ணப்பங்கள் அல்லது புகழ்ச்சியுரைகள் அடங்கிய செபம் தொடர்ந்து பாட பாட ஒவ்வொரு விண்ணப்ப செபத்திற்கு பின்பும் பதிலுரையும் எல்லாராலும் பாடப்பட வேண்டும். இது செபத்தின் இதயத்தில் “நெருப்பு தூண்களை” உருவாக்கும். மற்றவர்களுக்காக செபிக்கும் போது முழு மனித குடும்பத்தின் எல்லை வரை நமது செபம் பரவுகிறது. அனைத்து மக்களின் குறிப்பாக மறக்கப்பட்ட மக்களின் துன்பங்களை, வேதனைகளை, நம்பிக்கைகளை, சந்தோஷங்களை, இறைவனிடம் ஒப்படைக்கின்றோம். இறைவன் நமக்கு எல்லாமுமாக இருப்பதை கொண்டாட வைக்கிறது.

விண்ணப்ப செபங்களை அல்லது புகழ்ச்சி செபத்தை எடுத்துச் சொல்ல ஒருவர் (அ) இருவர் முன் வந்து செய்யலாம் “ஆண்டவரே இரக்கமாயிரும்” (அ) இறைவா உமக்கு புகழ் என்ற பதிலுரையை ஒவ்வொரு செபத்திற்கும் பின்பும் கூற வேண்டும். முன் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப செபங்கள் (அ) புகழ்ச்சி செபங்கள் முடிந்தபின் அவர்களின் இதயத்திலிருந்து எழுகின்ற செபங்களை சொந்தமாக சொல்ல நேரம் இருக்கும். இந்த சொந்த செபங்கள் சுருக்கமாகவும் இறைவனை நோக்கி சொல்லப்படுகின்றதாகவும் இருத்தல் வேண்டும். இது மற்றவர்களுக்கு தங்களுடைய கருத்துக்களையும், எண்ணங்களையும் தெரிவிக்கும் உரையாக இருக்க கூடாது. இந்த ஒவ்வொரு சொந்த செபத்திற்கும் பின்பும், எல்லாரும் சேர்ந்து பதிலுரைப் பாடவேண்டும்.

கர்த்தர் கற்பித்த செபம்

இறுதி செபம்

பாடல்

மற்றவர்கள் சிறிய குழு பகிர்வுக்கு அழைப்பு விடுக்கலாம். எடுத்துக்காட்டாக விவிலிய சிந்தனையில் ஈடுபடலாம், ஒவ்வொரு மாதமும் தெய்சே மடலில் மறையேடுகளின் பகுதிகளை படித்து பகிர்தல் மற்றும் அமைதி நேரம் என “Johannine hours.” பற்றி சொல்லப்படுகிறது.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 10 ஏப்ரல் 2006
பாடல் புத்தகங்கள், பிற புத்தகங்கள் போன்றவை, புத்தகம் மற்றும் குறுந்தகடுகள் பகுதியில் கிடைக்கும்.