தெய்சே சகோதரர்களின் வாழ்வில் கொல்கட்டாவிற்கு சிறப்பு இடமுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அருட் சகோ. ரோஜர் கல்கத்தாவில், அன்னை தெரேசா வாழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள மாவட்டத்தில் சில நாட்கள் ஏழைகளுடன் தங்கி இருந்தார். மீண்டும் ஒருமுறை அன்னை தெரேசாவின் இறுதி அஞ்சலியில் கலந்துக் கொள்ள கல்கத்தா வந்தார். அன்னை தெரேசாவின் மறைவுக்கான துக்கம் நெஞ்சை அடைத்திருந்தாலும், கல்கத்தாவிற்கு வந்ததற்காக மிகவும் மகிழ்ந்தார். இன்று அருட்சகோதரர் ரோஜர் இல்லை அவரின் நினைவோடு அவரது தெய்சே சகோதரர்களான நாங்கள் கொல்கட்டா வந்துள்ளோம்.
கடந்த சில மாதங்களாகவே, தெய்சே சகோதரர்கள், கொல்கட்டாவில் நடந்த, இளம் முதிர் இளையோர்களுக்கான (Young adult) இந்த கூட்டத்திற்கு, கொல்கட்டாவை சேர்ந்த 20 பங்கு தலங்கள் மற்றும் வட்டார திருச்சபை குழுமங்களுடன் சேர்ந்து, தயார் செய்துக் கொண்டிருந்தனர். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) இளையோர் ஆணையத்தின் அழைப்பின் பேரில் வந்த தெய்சே குழுமம், கொல்கட்டா கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் மற்றும் வடஇந்திய திருச்சபை ஆகியவைகளுடன் இணைந்து இந்த திருப்பயண கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
நடைபெற்ற நிகழ்வுகளின் சுருக்க அறிக்கை:
புதன்கிழமை 4, அக்டோபர்: தயாராகுதல்
கொல்கட்டா மாநகரம் இந்துக்களின் துர்கா பூஜா விழாக்கோலம் பூண்டிருந்தது. திங்கட்கிழமை மாலை (2-ம் தேதி) பெண்தெய்வங்களின் தற்காலிக சிலைகள் ஹீக்ளி நதியில் கரைக்கப்பட்டன. அதை தொடர்ந்து சில இரவுகளில் முக்கிய தெருக்களில் போடப்பட்ட தற்காலிய வழிப்பாட்டு கூடாரங்கள் இசையும், பாடலும், ஆடலுடன் கொண்டாட்டங்களை கட்டிக் கொண்டிருந்தது. முஸ்லீம் குடும்பங்ள் ஒவ்வொரு நாள் மாலையிலும் ரமதான் நோன்பு முடித்தல,; மாலைஉணவு சடங்குகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகளின் விரதம் போன்ற சடங்குகளை விட, அருமையான, இந்த ரமதான் விரதம் விழாக் கோலமாக இருந்தது. பருவ மழைக் காலம் நெருங்கி வருவதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியும் தெளிவாக தெரிந்தது.
பார்க் சர்கஸ், தொன் போஸ்கோ விளையாட்டு திடலில், இன்னொரு பெரிய கூடாரம் அல்லது பந்தல் போடப்பட்டிருந்தது. அது தெய்சே செப கூடாரம். அக்டோபர் 5 முதல் 9 வரை நடைப்பெற்ற நம்பிக்கையின் திருப்பயணம் மற்றும் செப வழிப்பாட்டிற்கான மைய இடம் அது: மூங்கில்கள், வண்ண மற்றும் பந்தல் துணிகளை கொண்டு பாரம்பரிய கலைநயத்துடன் அமைக்கப்பட்ட தற்காலிக மையம். இந்த கூட்டத்தில் பங்கேற்க கொல்ட்கடா மாநகருக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான இளம் முதிர் இளையோர்கள் கூடுவதற்கு போதுமானதாக இருந்தது.
நேற்று மாலை, ஏற்கனவே வந்து விட்ட இளையோர்கள் பலர், தெய்சே அருட்சகோதரர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களோடு சேர்ந்து வட இந்திய திருச்சபை இறையியல் கல்லூரியில், ஆயர் கல்லூரி வளாகத்தில், செபத்தில் ஈடுபட்டிருந்தனர். தெய்சே பாடல், இந்தி மற்றும் வங்காள மொழியில் பாடப்பட்டது. பாகிஸ்தான், வங்காள தேசம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், நாடுகளிலிருந்தும், தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர், ஹரியானா, போன்ற மற்றும் பல இந்திய மாநிலங்களிலிருந்தும் குழுக்கள் பல வந்திருந்தன. லட்வியா, ஸ்பெயின், லக்ஸ்சம்பர்க் மற்றும் இத்தாலியிலிருந்தும் இளையோர்கள் வந்திருந்தனர்.
அருட்சகோதரர் அலொய்ஸ், வங்காள தேசத்திலுள்ள தெய்சே சகோதரர்களை சந்தி;த்து விட்டு கொல்கட்டா வந்திருந்தார். இந்த மாநகரில் அனைவரையும் சந்திக்க மற்றும் கூடி செபிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இங்கு கிறிஸ்தவர்கள் சிறு பான்மையாக இருந்தாலும், நற்செய்தியின் மைய கருத்திற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்வு எப்போதும் வெளிப்படையாக தெளிவான சாட்சியமாக உள்ளது என்று கூறினார்.
வியாழக்கிழமை 5 அக்டோபர், வருகை
அதிகாலை வேளையில், ஹவுரா தொடர்வண்டி நிலையத்தின் வழக்கமான நெருக்கடியான மனித கூட்டங்களுக்கிடையே, பல இளையோர் குழு வந்து இறங்கினர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அசாம், ஆந்திர பிரதேசம், என இந்தியாவின் ஒவ்வொரு பகுதியினரும் ஒன்று கூடியிருந்தன. கொல்கட்டாவின் இளம் தன்னார்வத் தொண்டர்கள் அவர்களை சந்தித்து, புனித அலோசியஸ் பங்கு தலத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த இளையோர்கள் புன்னகையுடன் காத்திருந்தனர். சந்திப்பு நிகழ்ச்சி பற்றி தெளிவாக குறிப்பிடபட்டிருந்தது. “இது கருத்தரங்கம் அல்ல ஆனால் செபம் மற்றும் ஆன்மீக தேடலின் நேரம”; என ஒரு தன்னார்வத் தொண்டர் ஏற்றியிருந்த பலகையில் எழுதப்பட்டிருந்தது.
காலை உணவுக்கு (முட்டை, சப்பாத்தி, தேனீர்) பின், வந்திருந்த அனைவரும் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு பங்கு தலங்கள் மற்றும் ஆலய குழுமங்களில் உள்ள 12 மையங்களுக்கு அனுப்பபட்டனர். தேவையான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் கொல்கட்டாவின் போக்குவரத்து நெரிச்சல் மிக்க சாலைகளில் பயணித்து தங்கள் வரவேற்பு மையங்களை அடைந்தனர். ஒவ்வொரு மையத்திலும் இருந்த தயாரிப்பு குழு அவர்களை வரவேற்று அருகேயிருந்த பள்ளிகள் மற்றும் பிற இடங்களில், குடும்பங்கள், மற்றும் தனி இருப்பிடங்கள் என ஏற்பாடு செய்து, தங்கும் வசதிகளை மேற்கொண்டது.
‘சியால்தா’ தொடர்வண்டி நிலையத்திலிருந்து ‘தாய்ஸ’; குழு பார்க் சர்க்கஸ் அருகேயுள்ள கிறிஸ்து அரசர் பங்கு தலத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தியாவிற்கு வெளியேயிருந்து வருகின்ற குழுக்களை சியால்தா நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. கிறிஸ்து அரசர் பங்குதலத்தின் வரவேற்பு மையம், ஸ்பெயின், போலந்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்த இளையோர்களை வரவேற்றது. மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வந்த இளையோர்களையும் வரவேற்றது. பல மொழிகளில் எழுதப்பட்டிருந்த வருக என்ற வரவேற்பு பலகை, இந்த நாட்களில் நாங்கள் அனுபவித்த பொதுமை பண்பு நிலையின் அருமையான அடையாளமாக இருந்தது.
தென்போஸ்கோ திடலில், மாலை நேர செபத்திற்காக இறுதி தயாரிப்புகள் நடந்துக் கொண்டிருந்தது. வங்காளதேசம்; மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்த பலரும் இணைந்த பாடற் குழு பஜன்கள், மற்றும் பாரம்பரிய கிறிஸ்து பக்தி பாடல்களை பயிற்சி செய்துக் கொண்டிருந்தது. மேலும் தெய்சேவின் செப பாடல்களையும் இந்தி மற்றும் பெங்காளியில் பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர். இந்த பாடல்கள் தபேளா மற்றும் சிறு மணியோசை கருவிகளுடன் பாடப்பட்டது மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும்; இருந்தது! இன்று மாலை தெய்சே சபை தலைவர் அருட்சகோ. அலொய்ஸ் உரையாற்றினார். இந்த நாள் இறைவன் படைத்த நாள், மகிழ்வோம், அகமகிழ்வோம், என்பது தான் அவரது உரையின் தொடக்கம். மனித குடும்பத்தின் ஒரு பகுதியான கிறிஸ்து, அவரில் தம்மை இங்கு ஒன்று சேர்ந்திருக்கின்றார் என்பது பெரும் மகிழ்ச்சியானதுதான்.
வெள்ளிக்கிழமை, 6, அக்டோபர், நம்பிக்கமை
நேற்று 800 பேர் வந்து சேர்ந்தனர். தன்னார்வத் தொணடர்கள் நாள் முழுவதும் தொடர்வண்டி நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் சிலர் தாமதமாக வந்தனர். ஆனால் எல்லோருக்கும் தங்குவதற்கு தேவையான இடம் கிடைத்தது. தொன்போஸ்கோ இடத்தில் முதல் அமர்வை முடித்துக்கொண்டு வந்திருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தாலும், மொழிகளின் பல்வகைகுளும், தோற்ற நிலையில் ஒன்றி இருந்தாலும், செபம் மற்றும் நாம் ஒரே மனித குடும்பம் என்ற நமது பொது அடி வேரை நற்செய்தியில் தேடுதலிலும் உள்ள புரிதலை மேலும் வலிமைப்படுத்துகிறது. திடுமென எல்லோரும் ஒரே நிலையில் இருக்கிறோம், கிழக்கொன்றும், மேற்கொன்றும், வடக்கொன்றும் மற்றும் தெற்கொன்றும் இல்லை.
நேற்று இரவு மக்கள் அவர்களாகவே பஜன் மற்றும் தெய்சே பாடல்களை பாடி செபிப்பதில் கலந்துக் கொண்டனர். எல்லாம் செபத்தின் சிறப்பை பற்றி குறிப்பிட்டார்கள். எளிமையான பந்தல் முழுவதும் அழகும், இறைவனை தேடும் நமது ஏக்கத்தின் வெளிப்பாடும் அதே சமயம் நம்மிடையே அவரது பிரசன்ன கொண்டாட்டமும் நிறைந்திருந்தன. ஜரோப்பியர்களின் செவிகளுக்கு இந்திய முறையில் பாடுவது இனிய மயக்கத்தை ஏற்படுத்தியது, அது அவர்களை எளிதாக செபத்திற்கு அழைத்து சென்றது. இது வெறுமனே வித்தியாசமான ஒலிகளை கேட்டு மயங்குவதல்ல, மாறாக ஆன்மாவை மேலே எழுப்பும் வழிப்பாட்டின் செயலை தெளிவாக புரிந்துக் கொள்ளுதல் ஆகும்.
நண்பகல் செபத்திற்கு பின் மதிய உணவு பறிமாறப்பட்டது. உணவு சமையற் குழுவினால் திடலின் ஒரு பகுதியில் பெரிய பாத்திரத்தில் தயாhரிக்கப்பட்டது. அதிக காரமில்லாத சாதமும் முட்டை, அல்லது காய்கள், வாழைப்பழம் (அ) ஆப்பிள் என பிளாஸ்டிக் தட்டுகளில் தரப்பட்டது. உணவு மிக நன்றாக இருந்தது. உணவை பொட்டலங்களில் தருவது, கத்தி, முள்கரண்டி போன்றவைகள் இல்லை. கரண்டிகள் வழங்கப்பட்டாலும், பொதுவாக அனைவரும் கைகளை சுத்தமாக கழுவிக்; கொண்டு, இந்திய முறையில், கைகளாலேயே சாப்பிட்டனர். இளம் ஜரோப்பியர்கள் கைகளால் உண்டது அருமையான காட்சியாக இருந்தது. உணவு முடிந்தப் பின் எல்லா தட்டுகளும் கழுவி வைக்கப்பட்டன. எதுவும் வீணாகவில்லை.
மாலை 5 மணியளவில் வௌ;வேறு பட்டறைகளில் மக்கள் பங்கேற்றனர். பந்தலில் மேற்குவங்க இளையோர்கள் தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டனர். சபை அரங்கத்திலுள்ள, இரண்டு தெய்சே சகோதரர்கள் செப தியான சிந்தனை கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். கலை அரங்கில், வௌ;வேறு மதம் சார்ந்த மக்களிடையே வாழ்வின் கலந்துரையாடல் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் பலரும் கலந்துக் கொண்டு, ஒன்று சேர்தல், சேர்ந்து செய்தல், சேர்ந்து தியானித்தல் பற்றி கலந்துரையாடினர். இந்தியாவில் வாழ்வு உயிரோட்டமுளளதாக இருப்பதை இங்கு காணமுடிந்தது. பல மக்களுக்கு, பலதரப்பட்ட மதத்தினரை தொடர்பு கொண்டது. தினசரி கடை முறையாக உள்ளது என்பது உண்மையான விஷயம். தடைகள் இருக்கிறது, ஆனால் சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் இணைந்து வேலை செய்தல் என்ற பாரம்பரியம் மிக அற்புதமானது.
சனிக்கிழமை, 7, அக்டோபர், அமைதி
கொல்கட்டாவின், இந்த கூட்டத்தில் நடந்த பொது செபத்தின் அற்புதத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடமை, பரப்பரப்பான நகர வாழ்வில் அமைதியான இதயத் துடிப்பு. ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேளும் என்று நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தி மொழியில் பாடிய பதிலுரை இறைவனை நோக்கி எழுந்த நெருப்புத்தூண் போன்று இருந்தது. நேற்று இரவு செபம் அதிக நேரம் நீண்டது. மக்கள் இரவு உணவை கூட தள்ளி வைத்து விட்டு, திருச்சிலுவை உருவம் தங்கள் தலை மேல் வைக்கப்பட்டு செபிக்கப் படுவதற்காக பொறுமையாக காத்திருந்து, ஆசிர் பெற்றனர். இது, தங்களையும் தங்கள் பிரச்சனைகளையும் கிறிஸ்துவிடம் ஒப்படைப்பதின் அடையாளமாக இருந்தது. பல இளம் வயதினர், முதன்முறையாக தெய்சே கூட்டத்தில் சேர்ந்து செபத்தில் ஈடுபட்டனர், ஆனால் மிக எளிதாக, எளிமையாக அவர்கள் செபத்தில் இணைந்துக் கொண்ட விதம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.
அன்னை தெரேசாவின் அன்பின் மறைப்பரப்பு (Missionaries of Charity) அருட் சகோதரிகளின் சபை தலைவி அருட்சகோதரி நிர்மலா அவர்களும், சிலுவை ஆசிர் பெற வந்து செபித்து சென்றார்கள். ஒவ்வொரு நாள் மாலையில் இந்த சபையின் பல அருட்சகோதரிகள் இந்த செபக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அன்னை தெரேசாவிற்கும், அருட்சகோதரர் ரோஜர் அவர்களுக்குமுள்ள தொடர்பை பற்றி அருட்சகோதரர் அலொய்ஸ் உரையாற்றினார். இந்த தொடர்பு தொடர்ந்து வருவதற்காக அவர் நன்றியும் தெரிவித்தார்.
தொன்போஸ்கோ திடலை சுற்றி பார்த்து நடந்துக் கொண்டிருக்கையில் பல்வேறு இளையோர்களை பார்த்திருப்பீர்கள். அந்தமானிலிருந்து வந்த ஒரு இளைஞர்,2004 கிறிஸ்மஸ் நாள் பற்றி கூறினார். தன் பெற்றோர்களை பார்பதற்காக போர்ட்பிளேயர் வந்து, மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு திரும்பிய போது, தன் நண்பர்கள் அனைவரும் சுனாமி கடல் அலைக்கு பலியாகி விட்டிருந்தனர், என்று வருத்தத்துடன் கூறினார். நேபாளிலிருந்து வந்த ஒரு அருட்சகோதரி கூறுகையில், தன்னுடன் வந்துள்ள 35 பேரில் 2 பேர் இதுவரை வீட்டை விட்டு வெளியே வந்ததேயில்லை என்றார். லஓஸ்- லிருந்து வந்திருந்த 4 இளையோர்கள் எப்போதும் புன்னகையுடனே இருக்கின்றனர். சுவிட்சர்லாந்திலிருந்து வந்த இளம் பெண், நிகழ்ச்சி முன் தயாரிப்பு கூட்டத்திற்காக தான் வட கொல்கடாவின் ஒரு கிராமத்திற்கு அனுப்பப்பட்டபோது, தனக்கு கிடைத்த வரவேற்பை பற்றி மகிழ்ந்து கூறினார். முதல் நாளில் இருந்த தயக்கம், அச்சம் அனைத்தும் அகன்றுவிட்டது. அனைவரும் சுதந்திரமாக பழகினர், தங்கள் செய்திகளை, கேள்விகளை கதைகளை பறிமாறிக் கொண்டனர். மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.
இன்றைய மைய கருபொருள் அமைதி (சமாதானம்) நண்பகல் பொழுதின் சிறு குழு பகிர்வுக்காக தேர்வு செய்யப்பட்ட விவிலிய பகுதி எரேமியா 29: 11-14: உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்கு தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல் வாழ்வின் திட்டங்கள் அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். இந்த நாட்களில் நடந்த நமது கூட்டங்கள், மேற்கூறப்பட்ட விவிலிய வார்த்தைகளுக்கு உருவம் அளித்துள்ளது. வௌ;வேறு பட்டவர்களான நாம், அவ்வாறு ஒரு மனதோராய் இங்கு ஒன்று கூடியுள்ளோம்? அந்த ஒரே கண்ணோட்டத்தை எவ்வாறு நம் உள்ளத்தில் கொண்டுள்ளோம்?
கடந்த நூற்றாண்டின் சிறந்த பெங்காலி கவிஞர் ரபின்தரநாத் டாகூர் அவர்களின் பெருமை, புகழ் பற்றியும் மனிதகுலத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை பற்றியும் கலந்துரையாடும் பட்டறை இன்று மாலை நடைப்பெற்றது. மதம் அல்லது இனப் பின்னியை கடந்து அவர் இந்திய மற்றும் வங்காள தேசத்தவரால் மிகவும் மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு மனித உயிரிலும் இருக்கின்ற அற்புதத்தை தேடுதலை உணர்தலையும் இவரது கவிதைகள் தொடுகின்றன. நாம் கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதால் இன்று மாலை பந்தலில் 6000 மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டன. கிறிஸ்துவின் உயிர்ப்பினால் தான் நாம் இங்கு இருக்கிறோம்.
ஞாயிற்றுக் கிழமை, 8, அக்டோபர்: நம்பிக்கை
கொல்கட்டா கூட்டத்தின் மிக முக்கியமான செயல்பாட்டின் ஒன்று, நம்பிக்கை தரும் இடங்களை சென்று சந்தித்தல், மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து வருகின்ற மற்றும் தனியாக குழந்தைகளை வளர்ந்து வரும் பெண்களுக்கான கூட்டுறவு அமைப்பு தான் அன்குர் கலா. முதலாண்டில் பெண்களுக்கு தொழில் திறமை பயிற்சியும் (நெய்தல், தையல் போன்றவை) மாதம் சிறு தொகையும் வழங்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டில் ஊதியம் சிறிதளவு உயர்த்தப்படுகிறது, மேலும் அவர்கள் தயாரிக்கின்ற பொருட்கள் கூட்டுறவு முறையில் விற்கப்படுகின்றன. மூன்றாவது ஆண்டில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் தயாரிக்கின்ற பொருட்களுக்கும், அதன் விற்பனைக்கும் ஏற்ப பணம் வழங்கப்படுகிறது. பல பெண்கள் மூன்றாம் ஆண்டில் இருக்கின்றனர். மேலும் அவர்களின் சொந்த விற்பனை கடையையும் தொடங்கியுள்ளனர். இந்த கூட்டுறவு அமைப்பு கிறிஸ்தவ பெண்களால் நடத்தப்படுகிறது. ஆனால் பயனாளிகள் பலரும் இந்துக்கள். ஏழைகளுக்கு உதவுவதால், எவ்வர்று மதங்களுக்கு இடையுயேயுள்ள சிறு தடைகளை தகர்த்தெறியலாம் என்பதை காட்டும் சிறந்த எடுத்துக் காட்டு இது.
சியால்தா தொடர்வண்டி நிலையம் அருகே லொரேடோ அருட்கன்னியர்கள் சாலையோர சிறார்களுக்காக உறைவிடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென பள்ளிக்கூடமும் நடத்துகின்றனர். தங்கள் வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்கள், இதன் மூலம் நல்லதை அடைகின்றனர். கொல்கட்டாவில் வறுமையும் துன்பமமும் வெளிப்படையாகவே தெரிகிறது. சாலையின் நடைப்பாதையில் நடப்பது வழக்கமானது தான், ஆனால் உணர்ந்து நோக்கினால, பல குடும்பங்களின் படுக்கையறை, புழங்கும் அறை மற்றும் சமையலறையினுள் நடந்துக் கொண்டிருக்கிறோம் என்ற திடீர் அதிர்வு ஏற்படுகிறது. சாலை வாழ் குடும்பங்கள் வீதியே வீடாக கொண்டிருக்கின்றன. தங்களின் அயலான் துன்பம் போக்க சேவையாற்றுகின்றனர். நாமும் நம்மால் முடிந்த சேவை செய்ய அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
மாலை செபத்தில் அருட்சகோ அலொய்ஸ், எகிப்திலிருந்து வந்த புனித உருவச் சிலையைப் பற்றியும், நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் கொண்டுள்ள நட்புறவை அது எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது என்பது பற்றியும் உரையாற்றினார். தெய்சேவில் பிரபலமான இந்த சிலை, இயேசு தன் நண்பரின் தோள் மேல் கை போட்டு இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இருவரும் எதிர்காலத்தை நோக்கியிருக்கின்றனர். நட்புறவுடன், நம்மோமு நடந்து வரும் கிறிஸ்துவின் அற்புதமான உருவம் அது. இந்த உருவச் சிலையின் நகல்கள், இந்தியா மற்றும் ஒவ்வொரு வெளிநாட்டினர் பகுதியின் பிரதநிதிகளிடம் வழங்கப்பட்டது. வீடு திரும்பிய பின்பும் நம்பிக்கையின் திருப்பயணம் தொடர வேண்டும் என்பதே இந்த உருவப்படத்தை வைத்துக் கொள்வதின் உட்கருத்து.
இந்த உருவத்தை முதியோர் இல்லம், மருந்துவமனைகளுக்கு கொண்டு சென்று, ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்களிடம் வைத்து செபிக்கலாம். அல்லது வட்டார இயையோர்கள் ஒன்று கூடியும் அல்லது அதிகமாக சென்று சந்திக்காத, நகரின் கிராம ஒதுக்குபுற பகுதிகள்; மற்றும் பங்குதலங்களுக்கு சென்று அனைவரையும் கூட்டி செபிக்கலாம். இந்த கொல்கட்டா கூட்டத்திலிருந்து வந்தவர்கள், திருப்பயணத்தின் உணர்வை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்கின்றனர் என்பது, எவ்வளவு அற்புதமான விஷயம்.
திங்கட்கிழமை, 9, அக்டோபர் : வீடுகளிலும் தொடருதல்
ஒன்றாக சேர்ந்து கூடியிருந்தது என்னே அருமையானது இங்கு தரப்பட்ட விருந்தோம்பலும், வரவேற்பு மையங்களில் கவனமுடன் திட்டமிடப்பட்ட காலை நிகழ்ச்சிகளும் மற்றும் தொன்போஸ்கோ பள்ளி திடலில் நடைப்பெற்ற செபங்கள் மற்றும் பட்டறைகள் ஆகியவற்றுக்கான் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார்கள்.
அந்தந்த நாடுகள் வாரியக நடந்த கூட்டத்தின் இளம் ஜரோப்பியர்கள் கூறியதை கேட்க நன்றாக இருந்தது. ஜரோப்பாவிலிருந்து கூட்டத்திற்கு ஒரு வாரம் முன்பு அல்லது கூட்டத்திற்கு முன்பு வந்தவர்கள், சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு சென்று, குடும்பங்களில் தங்க அனுப்பப்பட்டனர். அங்குள்ள தலத்திருச்சபையின் வாழ்வில் பங்கேற்கவும் அனுப்பப்பட்டனர். தனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, தான் தங்கியிருந்த வீட்டிலுள்ளவர்கள் தன்னை கவனித்துக் கொண்ட விதத்தை பற்றி ஒரு இளம் பெண் நன்றியுடன் எடுத்துரைத்தார். மீண்டும் மீண்டும் மக்களை நம்ப வேண்டும் என இதிலிருந்து கற்றுக் கொள்கிறேன், இந்த அனுபவம் எளிதானதல்ல எனினும், மக்கள் அடிப்படையில் இரக்கம், விருந்தோம்பல் உடைய நல்லிதயம் கொண்டவர்கள் தான் என்பதை நினைவுக் கூற இந்த சம்பவம். எனக்கு பெரிதாக உதவியது என்று மேலும் அவர் கூறினார்.
மதிய வேளையில் நடந்த பொது அமர்வில், சிறு குழு பகிர்வு மகிழ்ச்சியை தந்ததாக சிந்து மாநிலத்திலிருந்து வந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் கூறினார்கள். இந்திய பஞ்சாபிகளாக, அவர்களோடு அந்த குழுவில் தாங்களும் உணர்ந்ததாகவும் கூறினார்கள். இந்தியா - பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது பஞ்சாப் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு இந்தியாவில் பஞ்சாப் என்றும், பாகிஸ்தான் சிந்து என்றும் மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இரு பகுதி மக்களும் சந்திப்பது எப்போதாவது நடக்கும் விஷயம். இத்தகைய சிறு பகிர்வு கூட்டங்கள், ஏன் நாம் கொல்கட்டாவிற்கு வந்தோம் என்பதை புரிந்துக்கொள்ள உதவுகின்றனர்.
நம்பிக்கையின் திருப்பயணம் தொடர்கிறது - இங்கு, இந்த சில நாட்களில் நாம் என்ன அனுபவம் பெற்றோமோ, அதை, தொடர்ந்து வருகின்ற வாரங்களும் மாதங்களும் நமக்கு முழுவதுமாக புரிய வைக்கும்.