பலமாதங்களாக நகரத்தில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் குடும்பங்களை முன் தயாரிப்பு செய்தப் பின் லத்தீன் அமெரிக்க இளம் வாலிபர்களின் கூட்டம் பொலிவியா கொச்சாபம்பாவில் 2007 அக்டோபர் 10-14 ஆகிய நாட்களில் நடந்தது. பொலிவியா, அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து 7000 பேர் பங்கேற்றனர். 2008க்கான இம்மடல் 2007ல் ஜெனிவாவில் நடந்த ஐரோப்பிய கூட்டத்தில் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.
ஒப்புரவு — ஒரு நெருப்பு
பொலிவியா மற்றும் அனைத்து இலத்தீன் அமெரிக்க நாட்டு இளையோர்களோடு இணைந்து நம்மை நாமே கேட்டுக் கொள்வது இது தான். நம்பிக்கையின் அந்த பாதையை இன்று நாம் திறந்து விடப் போகிறோம். தங்களின் எண்ணற்ற சமூக மற்றும் இன வேற்றுமைகளோடு, இந்த பொலிவியன் மக்கள், தங்கள் முரண்பாடுகளை பின்னுக்கு தள்ளி மாபெரும் நீதி மற்றும் அமைதியை நோக்கி செல்கின்றனர்.
இன்றும் ஆறாத வரலாற்றுக் காயங்களிலிருந்து, ஏற்படும் இன்றைய இறுக்கம் உலகின் பல பாகங்களில் அவ்வப்போது எழுந்துக் கொண்டுதான் இருக்கிறது. அநீதி ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்ற இடத்தில் சக்தியற்ற உணர்வுகளின் வீழ்ச்சியில், எங்கு குணம் தரும் ஆற்றலை காண முடியும்?
கொச்சாபம்பா இளையோர் கூட்டத்தில் வேறுபாடுகள் இருந்த போதிலும், அவைகள் பிரிவுகள் மற்றும் போட்டிகளை நோக்கி செல்லாமல், பரஸ்பர வளம் மற்றும் மகிழ்ச்சியின உறுதிபாட்டிற்குக சாட்சியாக இருந்தது. [1]
ஒப்புரவாகிய இதயத்தோடு நற்செய்தி அழைப்பிற்கு வாழ போராடும் தங்கள் முழு வாழ்க்கையையும் வெளிக்காட்டிய தைரியமான விசுவாசிகள் நாங்கள் பொலிவியாவில் கண்டுபிடித்தோம்.
ஒப்புரவின் இளவேனிற் காலத்தில்
உயிருள்ள இறைவனின் தனிப்பட்ட உறவிலிருந்து தான், ஒப்புரவாகிய இதயத்தோடு போராட நமக்குதேவையான ஆற்றல்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். உள் நிலை வாழ்வு இன்றி, நம்மால் நமது உள்ள உறுதியை முழுவதுமாக தொடர முடியாது. இறைவனில் நாம் மகிழ்ச்சியை காண்கிறோம். முழுமையாக வாழ்க்கைக்கான நம்பிக்கையை காண்கிறோம்.
நம்மை நோக்கி முதல் அடி எடுத்துவைத்தவர் இறைவனல்லவா? இயேசுவின் வருகையினால், இறைவன் ஒவ்வொரு மனிதனோடும், தன்னையே உண்மையான பரிமாற்றத்திற்கு உள்ளாக்கும் நிலையை எடுக்கிறார்.
அனைத்திலும் பின்னாலேயே நாம் இன்னும் இருந்துக் கொண்டேயிருக்கையில், இறைவன் மிக நெருக்கமாகிறார் என்பதை நாம் புரிந்துத்க கொள்கிறோம். அன்பின் காரணமாக, இறைவன் மனிதனாக அவதரித்தார். இன்னும் சொல்வதெனில் சிலுவையில் தன் உயிரை அளித்து, இயேசு இறுதியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். [2] இறைவனிடமிருந்து நம்மை எது பிரிக்கிறதோ, அதை தனதாக்கிக் கொண்டு, இறைவன் மனித குலத்திற்காக நம்மை போல் மாறினார். [3] நமது வாழ்வை அவர் மேற்கொண்டதற்கு பதிலாக அவர் தன்னுடைய வாழ்வை நமக்கு தருகிறார். [4] இந்த வகையில் முழு படைப்பும் உயர்நிலை உருமாற்றத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது. [5]
இறைவனோடு உள்ள இந்த பரிமாற்றம் நமது செபத்தில் மெய்மையாகியுள்ளது. தூய ஆவியின் மூலம் இறைவன் நம்முள் உறைகிறார். தன் வார்த்தையின் வழியாக, அருட்சாதனங்கள் வழியாக கிறிஸ்து தன்னையே நமக்காக தருகிறார். அதற்கு மாற்றாக, நாம் நம் அனைத்தையும் அவரிடம் சரணடைவோம். [6]
நம்முள் ஏற்கனவே எரிந்துக் கொண்டிருக்கும் இந்த தீ தான் கிறிஸ்து இந்த உலகிற்கு கொண்டு வந்த தீ அல்லவோ?
அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ள நமது நட்புறவை அகலமாக்குவோம்
ஒப்புரவு தீயை நாம் நமக்குள் அடக்கி வைக்க முடியாது. கைகெட்டும் தொலைவில் மற்றும், வெகு தொலைவில், நாம் அமைதியை உருவாக்குபவர்களாக முன்னின்று செல்லும் நமதுத பாதையில் அது ஒளியை உமிழ்கிறது. [7]
நமக்காக இறைவன் செயல்படுகிறார் என்பதை நாம் உணர்ந்தால், நமது பரஸ்பர உறவுகள் அதுதவாகவே மாற்றம் காண வைக்கும். நாம் மற்றவர்களோடு கொடுடத்துத பெறுகின்ற, வாழ்வின் பரிமாற்றமான, உண்மை உறவுவ கொள்ளும் திறன் பெற்றவர்களாவோம்.
மற்றவர்கள் திரும்ப பதில் தருவார்கள் என்ற எந்த உத்தரவாதம் இல்லாமல், நாம் மற்றவர்களை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்க நற்செய்தி நம்மை அழைக்கிறது.
நொறுங்கிய உறவுகளில் ஒப்புரவு என்பது இயலாத காhரியமாக இருரக்கலாம். ஆனாலும் ஒப்புரவாக வேண்டும் என்ற விருர்பபம் ஏற்கனவே அதில் தொடங்கிவிட்டது. எங்கும் கொண்டுட செல்லாத வழியை கிழித்து மேற்கொள்கிறார். குணம் பெற தேவையான அனைத்தையும் நாம் அவரிடம் ஒப்படைக்கிறொம். சிறியதோ பெரியதோ, இறுக்கத்தை பேர்க்கிடும், முயற்சியை எடுடக்குகம் வாய்ப்பை மேற்கொள்ள அது நம்மை தயாரிக்கிறது. ஒப்புரவு நமதுத சமுதாயத்தை ஆழமாக மாற்றும். உயிர்த்த கிறஸ்துவின் ஆவி உலகின் முகத்தை புதுபிக்கிறது. இந்த உயிர்ப்பின் பரிமாணம் நம்மை உந்தி தள்ள நம்மை நாம் அனுமதிப்போம். நாம் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சனைகளால், நாம் சோர்வடைய தேவையில்லை. நாம் சிறிய நிலையிலிருந்து தான் தொடங்கியுள்ளோம் என்பதை நாhம் மறக்க கூடாது. [8]
திருச்சபையின் உறவு நமக்கு ஆதரவு தருகிறது. இது அனைத்திற்குமான நட்புறவின் இடம். [9] தன் குழந்தைகளுக்கு செவிமடுக்கும் தாயாக தான் நமது திருச்சபை இருக்கிறது, அவர் நம்மை வரவேற்கிர். நம்மை ஆறுதல்படுத்துகிறார். [10] இறைவனின் கருணை நம்மில் ஒளிர நாம் வழிவகையை கண்டு பிடிப்போமா? ஏன்ற லத்தீன் அமெரிக்க இளையோர்களின் வார்த்தைகள் நம்ககு சவால் விடுகிறது.
முரண்பாடுகளின் சூழலில், மற்றவர்களுக்கு செவிமடுக்க வழிமுறைகளை நாம் கண்டுபிடிப்போமா? அப்போது பல பிரிவுகள் வேதனை குறைவானதாக இருக்கும். [11] மற்றவர்களின் இடத்தில் நமம்மையே பொருத்தி பார்ப்போம்.
கைவிட்பபட்டவர்களோடுடம் படைப்பபின் மேல் அதிக கவனிப்போடும் மிகுந்த எளிமை மற்றுறம் கூட்டொருமையில் வழியில் நமது வாழ்க்கை-பானியை திருப்புபதல் செய்ய தைரியமாக முடிவெடுப்போம்.
நம்மைவிட ஏழ்மையில் இருப்பவர்களோடு நாம் நெருக்கமாக இருப்போம். வாழ்வின் பரிமாற்றத்தை பகிர்தல் மூலம் காண்போம். அவர்கள் நம்மை தாராளமானவர்களாகவும், நம்மிலிருந்து நம்மையே வெளிக்கொணர வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வறுமை நமது வறுமையை நமது காய வரு நிலையை நாம் ஏற்று கொள்ள வைக்கிறது. இந்த நிலைப்பாட்டினால், மதிப்பு மிக்க ஒவ்வொரு மனித உயிர்க்கும் அதற்குறிய மாண்பை அளிப்போம்.
மன்னிக்கும் நிலைக்கு நாம் செல்வோமா? இழிவபடுத்துகின்ற சங்கிலி தொடரை குறுக்கீடு செய்ய இதைவிட வேறு ஏதாவது வழி இருக்கிறதா? [12] இதன்மூலம் இளம் பொலிவியர்களோடு ஒப்புரவின் அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இது வலி நிறைந்த கடந்த காலத்தை மறக்கின்ற விஷயமல்ல. அல்லது அநீதியான இன்றைய சூழலை கண்டும், கண்ணை மூடிக் கொள்கின்ற குருட்டு நிலைமையுமல்ல. மன்னிப்பதின் வழியாகக் காயங்கள் ஏற்படுத்திய மறக்க இயலா நினவுகளையும் தாண்டி செல்லவே நற்செய்தி நம்மை அழைக்கிறது. பதிலுக்கு நமக்கு ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளிலிருந்து மீள்கின்ற நிலைக்கு அழைக்கிறது. இந்த வழியில் இறைவனின் பிள்ளைக்குறிய விடுதலையை நாம் காண்கிறோம்.
ஆம் நான் ஒப்புபரவாகிய இதயத்தோடு, போராடுகிறோம். உறவுகளை தேடுகின்ற ‘உணர்வுகள்’ நிறைந்த தேடியவர்களாக அனைத்தையும் உள்ளடக்கி கொள்கின்ற பரந்த நட்புறவு உள்ளவர்களாக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்.