TAIZÉ

மிலான்

கூட்டத்திற்கு செய்திகள் அனுப்பட்டது

 

போப் ஆண்டவர் பதினாறாம் ஆசீர்வாதப்பர்

எனக்கு அருமையான மக்களே, தேசே சபையால் திருச்சபையின் அன்பில் ஐக்கியமாகியுள்ள இத்தருணத்தில், போப்பாண்டவராகிய நானும் உங்கள் செபத்தில் சேர்ந்து செபிக்கிறேன்.

உலக இளைஞர்களிடம் ஆழமான சகோரத்துவ உணர்வை நிறுவ உலகெங்கும் செப கூட்டங்களை சகோ.ரோஜர் அவர்களால் ஏற்படுத்தி நடந்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சகோதரர் அவர்களை நினைவு கூர்ந்து, பல்வேறு நாட்டிலிருந்தும், பக்தி இயக்கங்களிலிருந்தும் வந்துள்ள உங்களை வரவேற்கின்ற மிலன் நகர் வாழ் கிறீஸ்தவர்களுக்கும் உள்ள நல்ல உறவு பறிமாற்றங்களை பார்க்கின்றபோது மக்களின் அமைதிக்கான வித்தை ஊன்றி, ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்தும் உங்களை நிறைவாக வாழ்த்துகின்றேன். நிறுவனர் தேசே – வின் முன்மாதிரியும், போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பாலின் தீவிர சாட்சிகளாகவும் உள்ள நீங்கள் பேச்சிலும், அமைதியிலும், பணியிலும், சமாதான தூதுவர்களாக இருக்க வாழ்த்துகள். சோதனை, வெறுப்பு, சோர்வு, மனஉளைச்சல் போன்றவைகளால் சாரம் போய் உள்ள இவ்வுலகம் குறிப்பாக வளர்ந்த சமூகத்துள்ள இளைஞர்களுக்கும் தீவிரவாதம் என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆகவே, எவ்வாறு இயேசுகிறீஸ்து தன்னைத்தானே உலகிற்கு கொடுத்து, சிலுவையில் அறையப்பட்டு, மறித்து அன்பின் அடையாளமாக உள்ளது போன்று உள்ளத்தில் எளிமையும், மகிழ்ச்சியான அமைதி உணர்வுக்கு சான்று பகர உங்களை அழைக்கிறேன்.

அப்போஸ்தலர் கூறியது போன்று, “அவர் நமது அமைதி” (எபே: 2:14) அந்த முழுமையான அன்பின் அடையாளத்தை அடையவும், மன்னிக்கவும் நம்மை அழைக்கிறார். இயேசுவின் அன்னையான மரியாளின் செபமும் மற்றும் இறைவனில் சகோதர சகோதரிகளாக உள்ளவர்களின் செபமும் சேர்ந்த அப்போஸ்தல அன்பான ஆசியை போப்பாண்டவரான நான் அளிக்கின்றேன். குறிப்பாக, ‘தேசே’ சகோதர்கள் அவர்களுடைய குடும்பங்கள், மற்றும் இவர்களை வரவேற்று இறைவனின் அன்பை பகிர்பவர்களாக இருக்கும் அனைவருக்கும் என் சிறப்பான ஆசீர் விளங்கட்டும்.

ஒருங்கிணைந்த நாடுகளின் செயலர் திரு. கோஃபி அனான் அவர்கள்

‘தேசே’வின் அன்பு நண்பர்களே மற்றும் உலக முழுவதிலிருந்தும் வந்துள்ள இளைஞர்களே, தேசா சபையால் ஒருங்கிணைக்கப்பட்டு 28 – வது ஜரோப்பிய இளைஞர்கள் மாநாட்டிற்கு, ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைப்பு சார்பாகவும், என் சார்பாகவும், அறிக்கை அனுப்புவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நம்பிக்கையின் புனித பயணமான இப்பூவுலகில், இச்சமயம், உங்களை இணைக்கின்ற நம்பிக்கையை கொண்டாடுவது ஒரு நல்ல வாய்பாக உள்ளது. அதே சமயத்தில் சமூகத்தில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாட்டைப் பற்றி திரும்பிப்பார்க்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது. நீங்கள் எந்த நாட்டவராயினும், பெரியவராயினும், சிறியவராயினும், பணக்காரராயினும், ஏழையாயினும், நீதிக்காகவும், அமைதிக்காகவும் போராட வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்கள்.

நீதி, அமைதி போன்றவைகள் நம்மில், நமது சமுதாயத்தின் மையப்பகுதியில் தொடங்குகிறது. நம் சமுதாயத்தில் பிளவுபட்ட குடும்பத்தினர் மத்தியில், குற்றவாளிகள் மத்தியில் தான் அமைதி பிறக்கின்றது.

‘போரை எதிர்பது கடினம் இல்லை, ஆனால் போரை எதிர்த்து நிற்பது தான் கடினம்’. தவறான எண்ணங்கள் வெறுப்பை ஏற்படுத்துகின்ற கலவைகள், ஆழ்ந்த மன இறுக்கம் போன்றவைகள் தான் நமது சமூகத்தை அச்சுறுத்தும், நாடுகளுக்கிடையே அமைதியை சீர்குலைக்கும் காரணிகளாகும். ‘ஒன்றை அழிப்பதைவிட, உருவாக்குவதுதான் கடினமானதொன்றாகும்’. மேலும், ஒருவருடன் மனம்திறந்து பேசுவது, ஒருவருடைய கருத்தை மற்றொருவர் புரிந்துகொண்டு, நான் மறுக்கப்பட்டவன் என்பதை ஏற்க மறுப்பதுதான் கடினமான ஒன்றாகும்.
நாம் அதிகமான சுதந்திரம் உள்ள கலவை மிகுந்த நாட்டில் வசிக்கின்றோம். சமூகத்திற்கும், உலகிற்கும் அமைதி நிலவ எல்லா நாட்டு கலாச்சாரத்திற்கும், நாகரீகத்திற்கும், சமமான மதிப்பும், மரியாதையும் விஞ்ஞானம் தழைக்க, உலக சமாதானம் பெருக மிகவும் முக்கியமானதாகும்.

சகோ. ரோஜர் அவர்களை நினைவு கூறும் இத்தருணத்தில், தோழமை, மரியாதை, பொறுத்துக்கொள்ளல் போன்றவற்றில் சகோதரர் அவர்கள் ஒரு ஓய்வில்லாத வக்கில் என்பதை கண்டு வணங்குகிறேன்.

தனது வாழ்நாள் முழுவதும் அமைதிக்காகவும், நல்உறவுக்காகவும், தன்னையே அர்பணித்தார். தேசே – வின் உணர்வு உங்கள் ஒவ்வொரு செயலிலும், இக்கூட்டத்திற்கு பிறகும் அவரின் உணர்வுகள் தொடர வாழ்த்துகள்.

பட்ரியாக் பர்த்தலோமியு – காஸ்டான்டின் நோபிள்

மனிதனை உருவாக்கிய, வார்த்தையான கடவுளின் ரகசிய வாழ்வில் ஆழமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அன்பே உருவான இறைவன் தன்னையே வெறுமையாக்கி, அடிமைதனத்தினின்று, இறைவனின் அருளால் மாண்புள்ள மனிதர்களாக மாற செய்தார். ஆகவே, மிகவும் சிரத்தைக் கொண்டு உத்வேகத்துடன், கவனமுடன் இந்த 28 – வது ஐரோப்பிய இளைஞர்களுக்கான மாநாட்டினை மிலனில் தேசே சபை தயாரித்துள்ளது. உங்களை தலைவணங்கி பாராட்டுகிறேன். என்னுடைய இச்செய்தி விடாமுயற்சியுடனும், தியாகத்தோடும் செயல்பட்டு மறைந்த இச்சபையை தோற்றுவித்தவரான சகோ. ரோஜர் அவர்களுக்கு காணிக்கையாக்குகின்றேன். பல பகுதிகளிலிருந்து வந்து கூடியிருக்கும் ஐரோப்பிய கிறீஸ்தவ இளைஞர்களை பார்க்கும்போது, வலுவிழந்து கொண்டிருக்கும் பழைய கண்டத்தை துளிர்விக்கும் அந்த எழுச்சியை பார்க்கின்றேன்.

கிறீஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறீஸ்துவின் நற்செய்திக்கு இணங்க தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இறைவனின் அளவற்ற அன்பையும், தூய ஆவியின் நல்உறவையும், இறைவனின் சமாதானத்தை சுமந்து செல்லும் தூதுவர்களாக இருப்போம். ஆன்மீக ஆசான் என்கின்ற முறையில் எனது இதய பூர்வமான மகிழ்ச்சியும், வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த மிலன் நகரில் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் என்பது நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள். மிலன் நகர்தான் எண்ணிலடங்காத அருட்கொடைகளான புனிதர்களை ஈன்றெடுத்து தந்துள்ளது. இறைவன் அருளும், அன்பும், சமாதானமும், தூய ஆவியின் ஆறுதலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருப்பதாக.

இரண்டாம் பட்ரிக் அலெக்ஸ் - மாஸ்கோ

எனது அருமை சகோதரமே,
இத்தாலி மண்ணில் நடைபெறும் இம்மாபெரும் ஐரோப்பிய இளைஞர்களின் கூட்டத்திற்கு வந்துள்ள பங்கேற்பாளர்களையும், இதன் ஒருங்கிணைப்பாளர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
இக்கூட்டத்தின் கருவாக கிறீஸ்துவின் அன்பும், சமாதானமும், ஆறுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வன்முறை, வெறுப்பு, ஆறுதலற்ற நிலை போன்றவைகள் இருக்கும்போது இவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சகோ. ரோஜர் அவர்களின் பிரிவு சோகம் இன்றும் நம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றுள்;ளது. உலகில் அன்பும், நல்லவையும் நிலவ பாடுபட்டார். நாடுகளில் வன்முறையும், அராஜகமும் சகஜமாக நடந்து கொண்டுள்ளது. இது இவ்வுலகில் யாரும் நிலையாக இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. சுகங்களும், சொத்துகளும், ராணுவமும் மனித குலத்தை காப்பாற்ற முடியாது.
உலக மக்களில் சமாதானம் நிலைகுலைந்துள்ளது என்பது கிறீஸ்தவர்களாகிய நமக்குத் தெரியும். ஆன்மாவில் அமைதி இல்லையென்றால், மற்றவர்களிடம் அன்பு வைத்திருக்க முடியாது என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். ஆன்பும், அமைதியும் கடவுளின் அருட்கொடைகளாகும். இக்கொடைகளுக்கு மூலமான இறைவன் அவனால் மட்டுமே மனிதகுலத்திற்கு அருளப்படும்.
பரலோகத்திலுள்ள தந்தை மட்டுமே, தன் குழந்தைகளுக்கு அவர் விரும்பியதை அருளுவார். ‘சுமை சுமந்து சோர்ந்திருப்போர்களே வாருங்கள் என்னிடம் நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்’ (மத்: 11.28) என்று யேசு கூறுகிறார்.
உங்களில் சோகங்கள், கஸ்டங்கள், கெட்ட ஆவியின் தூண்டுதல்கள் போன்றவைகள் இருப்பினும் இறைவனை பற்றிக்கொண்டு அவரை பின்பற்ற உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன். முழு உள்ளத்தோடு உங்கள் அயலாரை நேசிக்கும்போது தான் இறைவனை அன்பு செய்ய முடியும். அப்போது தான் இறைவனின் அன்பையும், அமைதியையும், ஆறுதலையும் பெற்று மற்றவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லும் சிறந்த சாட்சிகளாய் விளங்குவோம்.

பேராயர் டாக்டர். ரோவன் வில்லியம்ஸ் - கேண்டிபரி

இந்த ஆண்டின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் சகோ.ரோஜர் அவர்களின் மரணத்தை மறக்க முடியாது. இன்றைய சூழலில் ஒரு சிலரேனும் செய்ய முடியாத செயலை சகோ. ரோஜர் அவர்கள், மதத்தின் கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளார். மதநடவடிக்கைகளையும், எண்ணிலடங்கா எளியோருக்கான மதமாக மாற்ற விழைந்தார். திருச்சபையின் பாவமன்னிப்புக்கான முதன்மையை ஜரோப்பிய யுத்தத்திலும், பிறகு உலகமுழுவதும் பரப்பினார்.

அவருடைய ஜெபமும், பிரசன்னமும் எப்போதும் இல்லாதது போல இப்போது அதிக சக்திவாய்ந்ததாகவும், உண்மையாகவும் உள்ளது. இயேசுவின் வாழ்க்கை படிப்பினைகளை புதுபித்துக்கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவரிலும் சகோ. ரோஜர் அவர்களின் நினைவுகள்; என்றும் வாழும் தோழனாக இருக்கட்டும்.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 12 ஏப்ரல் 2006