TAIZÉ

திருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக

எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா!

 

தேசேவுக்கும் 2-ம் ஜான்பால் திருத்தந்தைக்கும் உள்ள உறவு 43 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஒன்று. 1962-ல் வத்திகான் சங்கத்தின் போது, அருட்சகோதரர் ரோஜர் கரோல் வோஜ்டய்லா என்ற க்ராகோ மறைமாவட்டத்தின் துணை ஆயரை சந்தித்தார். வத்திகான் சங்க காலை அமர்வுகளுக்கு முன்பு, தினமும் இருவரும் புனித பிட்டர் பசிலிக்காவின் சிற்றாலயத்திற்கு சென்று செபிக்கும் பழக்கம் இருந்ததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டனர். ரோம் நகரில் தங்கியிருந்த தேசே சகோதரர்கள் குழுமம், ஆயர் கரோல் வோஜ்ட்ய் - வை தங்களோடு வந்து உணவருந்த அழைத்தனர்.

அவர் க்ராகோவின் பேராயராக இருந்த போது 1964 மற்றும் 1968 ஆகிய ஆண்டுகளில் இருமுறை தேசேவுக்கு வருகை தந்தார். போலந்து சிலெஸ்யாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சுரங்க தொழிலாளர்களின் திருயத்திரையின் போது வந்து உறையாற்ற அருட்சகோ. ரோஜர் பல முறை அழைக்கப்பட்டார். அந்த திருயாத்திரையை தலைமையேற்று நடத்திய போராயர் வோஜ்ட்ய்லா, தேசே சகோதரர்களை தன் இல்லத்தில் விருந்தினராக தங்க அழைப்பு விடுத்தார்.

1978-ல் பேராயர் கரோல் வோஜ்ட்ய்லா திருத்தந்தை 2-ம் ஜான்பாலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு தனது மரனம் வரை ஆண்டு ஒருமுறையாவது அருட்சகோ. ரோஜரை வத்திகானுக்கு அழைத்து சந்தித்தார். 1981-ம் ஆண்டு அவர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும் கூட அருட்சகோ. ரோஜரை அழைத்து வரைச் செய்து சந்தித்தார். ரோமில் நடந்த ஐரோப்பிய ஆண்டு மாநாடுகளுக்கு வந்த வளர்ந்த இளையோரை எப்போதுமே இனிதுடன் வரவேற்றார்.

1986 அக்டோபர் 5-ம் நாள் ஞாயிற்று கிழமை 2-ம் ஜான்பால் தேசேவுக்கு வருகை தந்தார்.

2-ம் ஜான்பால் திருத்தந்தையின் மரணத்திற்கு பிறகு

அருட்சகோதரர் ரோஜர் அளித்த சாட்சியம்.

26 ஆண்டுகளாக இறை பிரதிநிதி பணி செய்த அந்த இதயம் அமைதி மற்றும் தோழமை மறைபணியில் நன்றியால் நிறைந்திருந்தது.

JPEG - 12.3 kb

1962-ம் ஆண்டு வத்திகான் சங்கத்தின் போது நான் சந்தித்தவர், 16 ஆண்டுகளுக்கு பின் திருத்தந்தையானார். ஓவ்வொரு ஆண்டும் எனக்கு தனிப்பட்ட அனுமதி தந்த அவரை நான் சந்திக்க செய்தார். அவரது வாழ்வின் சோதனையான கட்டங்களை நான் நினைத்து பார்த்திருக்கிறேன். குழந்தை பருவத்திலேயே தன் தாயை இழந்தார். இளம் பயதில் தன் தந்தை மற்றும் ஒரே சகோதரனை இழந்தார். நமது குழுமம் இவருக்கு தரவேண்டிய வாக்குறுதி மூலம் மற்றும் நாம் பல இளம் வயதினரிடம் கண்டுணர்ந்த நம்பிக்கையை பற்றி போசுவதின் மூலம் மகிழ்ச்சியுண்டாக்கு, ஆறுதல் மற்றும் அவரது இதயம் போன்ற வார்த்தைகளை கண்டுபிடி என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

திருச்சபை மற்றும் மனித குடும்பத்தின் மேலிருந்த அன்பின் தீயால் ஆட்கொள்ளப்பட்ட 2-ம் ஜான்பால், அந்த தீயின் அனலை அனைவருக்கும் பரவச் செய்ய அவரால் முடிந்த அனைத்தையும் அவர் செய்தார். கத்தோலிக்க திருச்சபை முழுவதற்கும் அவர் பல நாடுகளுக்கு சென்று சில நேரங்களில் அவர்களுக்கு சவால் விடுத்து, அதிகமாக இறைவனின் கருணையை வெளிப்படுத்தினார். 100 திருபயனங்களுக்கு மேல் மேற்கொண்டது, எதிர்கால அமைதியை கவனமாக உருவாக்கி கொண்டிருந்த ஒரு ஆன்மாவின் தெளிவான வெளிப்படுத்துதல் என்பதை நினைவுபடுத்துகிறது.

1986 அக்டோபர் 5-ம் நாள்

2-ம் ஜான்பால் தேசேவுக்கு வருகை தந்தார்

தன்னுடைய பிரான்ஸ் நாட்டு பயணத்தின் போது தேசேவுக்கு வருகை தர 2-ம் ஜான்பால் முடிவு செய்திருந்தார். இதற்கு முந்தின நாள் Lyon -ல் இருந்தார், பின் Paray-le-Monial, Ars and Annecy ஆகிய இடங்களுக்கு செல்வார்.

JPEG - 12.6 kb

2-ம் ஜான்பால் திருத்தந்தை தரிசனம் தருகின்ற ஒப்புறவு ஆலயத்தை சேர்ந்தார் போன்று மிகப் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டது. 7000 இளையோர் வந்தார்கள். இரவு முழுவதும் சிலர் செபத்தில் ஈடுபட்டனர். சகோதரர்கள் காலை 8.30 க்கு திருச்தந்தையை வரவேற்கச் சென்றனர். ஆனால் அந்த பகுதி முழுவதும் அர்த்தியாகி பணிமூட்டம் இருந்ததால் ஹெலிகாப்டரை தவிர்த்துவிட்டு அவர் Lyon–னிலிருந்து சாதாரன உந்து வண்டியில் வந்து சேர்ந்தார். அவரது வருகையின் நினைவாக வைக்கப்பட்டிருந்த மணிகளை அவர் கடந்து சென்றார். ஆந்த 5 மணிகளில் ஒரு மிகப் பெரிய மணியின் மேல், 2-ம் ஜான்பால் திருந்தந்தையாக பதவி ஏற்ற போது பேசிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தது. ‘அஞ்சாதீர்கள்’ கிறிஸ்துவுக்காக கதவுகளை அகலமாக திறந்து வையுங்கள்”.

ஆலயத்தில் நுழைந்து திருத்தந்தைத அவருக்குரிய இருக்கையில் அமந்ததும், அருட்சகோதரராம் ரோஜர் சில குழந்தைகள் புடை சூழ சில வார்த்தைகளை கூறி அவரை வரவேற்றார். 2-ம் ஜான்பால் இளைஞர், இளைஞர்களிடம் ஏன் அவர் தெய்சோவுக்கு வந்தார். ஆவர்களிடமிருந்து திருச்சபை என்ன எதிர்பார்க்கின்றது என்பது பற்றி உரையாற்றினார்.

திருச்சபைக்கு உங்கள் ஆர்வம் தேவை

“(…) உங்களை போன்ற திருப்பயணம் செய்வோர், குழும நண்பர்கள் திருச்சபைக்குத் தேவை. திருத்தந்தை இந்த இடத்தின் வழியாக செல்கிறார். ஆனால் தெய்சோ வழியாக செல்பவர்கள் நீறூற்றின் நெருக்கத்தில் செல்கின்றனர், அதன் வழியாக பணிப்போர் அங்கு தங்கி தாகம் தீர்த்துக்கொள்கின்றனர். இங்குள்ள சகோதரர்கள் உங்களை இங்கே அவர்களோடேவே தங்க வைக்க விரும்புவதில்லை. நீங்கள் அமைதியில் செபத்தில், இருக்க விரும்புகின்றனர். கிறிஸ்த்து வாக்குறுதியளித்த வாழ்வின் நீரை நீங்கள் பருகச் செய்கின்றனர். அவரது மகிழ்ச்சிகை தெரிந்துக் கொள்ள அவரது பிரசன்னத்தை உணர்ந்திட, அவருடைய அழைப்புக்கு பதில் தர உங்களுக்கு உதவுகிறார்கள். பின்பு நீங்கள் இங்கிருந்து சென்று, அவரது அன்பிற்கு சாட்சிகளாக இருந்து, உங்கள் பங்குகளில், பள்ளிகளில், பல்கலைகழகங்களில், உங்கள் பணியிடங்களில் உங்கள் சகோதர சகோதரிகளுகு;கு பணி செய்ய அனுப்புகின்றனர்.

இன்று எல்லா தவ திருச்சபைகள், கிறிஸ்துவ குழுமங்கள், பெரிய அரசியல் தலைவர்கள் என உலகம் முழுவதிற்கும் தேசே குழுமத்தை நன்கு தெரியும். இளையோர் மேல் தேசே சகோதரர்கள் வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கை பற்றியும் உலகம் அறியும். இவற்றிற்கெல்லாம் மேலே இந்த நம்பிக்கையை நான் பகிர்ந்துக் கொள்வதால், இந்த காலையில் இங்கு வந்திருக்கிறேன்.

அன்புள்ள இளம் மக்களே! மகிழ்ச்சியான நற்செய்தியை இந்த உலகிற்கு தர திருச்சபைக்கு உங்கள் ஆர்வமும் உங்கள் தாராள மனமும் தேவை. உங்களது கஷ்டமாக வாழ்க்கை, மற்றும் சோதனைகளினால் கவலை மற்றும் அச்சத்தில் ஆழ்ந்து ஒவ்வொரு கிறிஸ்துவ அழைப்பின் குறியீடான ஆற்றலை இழந்து பலவீனமாகி விட்டர்கள் என்று உங்களுக்கு தெரியம். நிறுவனங்களும் இது போன்று பலமிழந்திருக்கிறது. ஏனெனில் அவைகளின் தினசரி ஓரே மாதிரியான நடைமுறைகள் அல்லது அதன் உறுப்பினர்களின் முழுமையின்மையால் நற்செய்தி அறிவிப்பு பனி போதுமானதாக இல்லை. எனவே திருச்சபைக்கு அது தனது மறைப்பணியை இன்னும் சிறப்பாக செய்ய உங்கள் நம்பிக்கையின் சாட்சியமும், உங்கள் ஆர்வமும் தேவைபடுகிறது.”

ஆக்கபூர்வமாக விமர்சிப்பதோடு திருப்தியடைந்து விட வேண்டாம், அல்லது பிற நபர்களோ, நிறுவனங்களோ மாறிவிடும், நன்றாகிவிடும் என்று காத்திருக்க வேண்டாம். உங்களுடைய பங்குதலம், மாணவர் அமைப்புகள், வௌவேறு இயக்கங்கள், குழுமங்கள் போன்றவைகளை நோக்கி செல்லுங்கள், உங்கள் இளமையின் ஆற்றல் மற்றும் நீங்கள் பெற்ற திறமைகள் மூலம் அவர்களை கொண்டு வாருங்கள். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவை திருச்சபை பணியாளர்களுக்கு தாருங்கள் இவர்கள் இயேசுவின் பெயரால் வருகின்ற உங்கள் பணியாளர்கள், இந்த காரணத்திற்காகவாவது இவர்கள் உங்களுக்கு தேவை. திருச்சபைக்கு உங்களது இருந்தாலும் பங்கேற்பும் தேவைப்படுகிறது. திருச்சபைக்குள் ஏற்பட்ட பிளவுகளால், பிரிவினைகளால், உள்நிலை இறுக்கங்கள், பிரச்சனைகள், அதன் உறுப்பினர்களின் வருந்தத்தக்க செல்களால் சலிப்பும் சேர்வும் உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும். ஆனால் திருச்சபைக்குள் நீங்கள் தொடர்ந்து இருந்தால் தான் அதன் மலைமையான கிறிஸ்துவிடமிருந்து அவரது உண்மையின் வார்த்தை, அவன் சொந்த வாழ்வு மற்றும் அன்பின் உயிர் மூச்சை பெறுவீர்கள். இது அவரை உண்மையாக அன்பு செய்யவும், உங்கள் வாழ்வை மற்றவர்களுக்காக மகிழ்ச்சியான பரிசாக தருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிடவும் செய்யும்.(…)”

தனது உரையை முடித்து விட்ட 2-ம் ஜான்பால் சில கணம் செபத்தில் கழித்துவிட்டு. கீழே சென்று அருகிலிருந்த அறைக்கு சென்று, ஒவ்வொரு சகோதரரையும் சந்தித்தார். இளையோர்கள் தொடர்ந்து கூடாரத்தில் பாடல் பாடிக் கொண்டிருந்தனர். (எல்லா நாடுகளும் ஆண்டவரை போற்றுங்கள்) பின் திருந்தந்தை தேசே சகோதரர்களுக்கு தனி உரை நிகழ்த்தினார்.

இன்று இன்னும் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள்

இந்த சகோதரர்கள் குழுமத்தை வெகுகாலமாக தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று நினைவுகூர்ந்த திருத்தந்தை 2-ம் ஜான்பால் தன் பேச்சை தொடர்ந்தார். “நீங்கள் இளம் பருவத்தில் நுழைந்த போது நான் இங்கு வந்து உங்களை சந்தித்தேன். ஆனால் இன்று இன்னும் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். உங்களை சந்திக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் உணர்ந்தேன். இளம் வயதினரோடு வரும் உங்கள் வருகைக்கு ரோம் நகர் எப்போதுமே திறந்திருக்கிறது.” என்று கூறிய திருத்தந்தை அருட்சகோதரர் ரோஜர் போலந்துக்கு வருகை தந்ததையும் கன்னிமரியாள் பற்றியும், உலகமுழுவதின் மேய்பு பணியாளர் பணி பற்றியும் அவர் கூறிய வார்த்தையை நினைவுகூர்ந்தார். தேசே சகோதரர்களுக்கு திருச்தந்தை நினைவு செய்தியை எழுதி வைத்தார். அது சகோதரர்களின் உள்ளத்தை வெகுவாக தொட்டது. இதை அருட்சகோதரர் ரோஜர் தேசேவின் பொக்கிஷமாக வைத்திருப்பார். இது குழும வாழ்வின் அவசியமான அமைவுகளாக கருதப்படுகிறது.

திருத்தந்தை 2-ம் ஜான்பால் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனது வாகனம் வரை சென்ற அவர் திடிரென ஆலயத்தை நோக்கி திரும்பி, இளையோர்களை வாழ்த்தினார். “வருத்தத்துடன் நான் விடைபெறுகிறேன் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஆனால் திருத்தந்தைக்கு பல மேலதிகாரிகள் இருக்கின்றனர்" என்று கூறியதும் பல சிரிப்பொலியுடன் கரவோலியும் சேர்ந்து, திருத்தந்தை 2-ம் ஜான்பால் விடைபெற இளையோர் இனிய பாடல் காற்றில் கலந்து வந்தது.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 13 ஏப்ரல் 2008