TAIZÉ

கடிதம் 2007

கல்கத்தாவிலிருந்து கடிதம்

 
சுமார் முற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சகோ. ரோஜர், உலகி;ன் பல்வேறு கண்டங்களிலிருந்தும் வந்திருந்த சகோதர்களுடன் சேர்ந்து, கொல்கொத்தாவின் ஏழ்மையான கிராமமொன்றில் கைவிடப்பட்ட சிறார் மற்றும் வயதானவர்களுக்காக, அன்னை தெரேசாவுடன் சேர்ந்து சிலகாலம் பணியாற்றினார். அப்போது பாரீசின் நாட்ரே டாம் போராலயத்தில் இளையோரால் வெளியிடப்பட்ட “கடவுளின் மக்களுக்கு கடிதம்” என்கிற நூலை கொணர்ந்தார். புpன்னர், அன்னை தெரேசாவுடன் சேர்ந்து பல செய்திகளையும், மூன்று புத்தக்களையும் எழுதினார்.
 
1976ல் நடந்த இந்த சம்பவங்களே நமது சமூகத்திற்கு இந்திய கிறிஸ்தவர்களுடன் உறவுக்கான விதையாயிருந்தது. நாடுதழுவிய பயணங்கள், சென்னையில் நடந்த கடணந்தடுவிய இரண்டு கூட்டங்கள் மற்றும் தெய்சேவில் இந்திய இளைஞர்களின் தொடர்ந்த பங்கேற்பு யாவும் இந்த உறவுக்கு வித்தியாசமான பரிமாணங்களை தந்தது.
 
எனவே கல்கத்தாவிற்கு திரும்பி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது அவசியமென நான் கருதினேன். பெருவாரியான ஆசிரியர்களை கொண்ட 6000 இளைஞர்களை அக்டோபர் 5 முதல் 9 வரை (2006) ஒருங்கிணைக்க நான் முடிவெடுத்தேன். “நம்பிக்கையின் திருப்பயணம்” என்கிற புதிய பரிமாணத்தை விவரிக்கும் முயற்சியாக இத்திருப்பயணம் இருக்கும். ஆசிய இளைஞர்களோடு அவர்கள் கண்டத்திலேயே பயணித்து, அவர்தம் குரலை கேட்டு, அவர்கள் நம்பிக்கைக்கு உதவுவது. இதற்காக, சாகிராப்பில் நடந்த ஐரோப்பிய கூடுகையில் வெளியிட எழுதப்பட்டதே இந்த “கல்கத்தாவிலிருந்து கடிதம்”.

ஒட்டுமொத்த மனுக்குலமும் ஒரே குடும்பம் என்பதையும் எந்த பாகுபாடுமின்றி கடவுள் எல்லா மனிதனுள்ளும் வாழ்கிறார் என்பதையும் - பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இளயோர் ஒருங்கிணைப்பான “பூமியின் மேல் நம்பிக்கையின் பயணம்” அழுத்தமாக கூறியுள்ளது.

கடவுளின் பிரசன்னத்திற்கும், சக மனிதர்களின் மதிப்பீடுகளுக்கும் எத்தகைய முக்கி;யத்துவம் தரப்படுகிறது என்பதை ஆசியாவில் நாம் கண்டு கொண்டோம். இதுவே இன்றைய நவீன சமூகத்திற்கு அத்தியாவசியமாயிருக்கிறது. இப்படியான ஒருங்கினைப்புக்காகவும் உலகெங்கும் அதனை கூறவுமே கிறிஸ்து கரங்களை விரித்து சிலுவையில் தம்மை ஒப்புக்கொடுத்தார்.

ஒரே குழுமமாய் உலகெங்கும் இருக்கும் மனுக்குல இளைஞர்களின் முன் நிற்கும் கேள்வி ஒன்றுதான். எல்லாவித வன்முறைகளினின்றும் எப்படி தற்காத்துக் கொள்ள போகிறோம்? வெறுப்பு மற்றும் வேறுபாடுகளை எப்படி கடக்கப்போகிறோம்? இங்கே, அன்பையும் நம்பிக்கையையும் தேர்ந்துகொள்ள நமக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த அன்பை தேர்வு செய்வதால் நமக்கும் நம்மை நம்பியுள்ளோருக்கும் ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் சுதந்திர வெளியை நாம் கண்டடைய முடியும்.
நம்மிலும் எளியவருக்கு உதவ கடவுள் நம்மை வைத்திருக்கிறார். “சின்னஞ்சிறியவருக்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்”. [I]

தெற்கிலிருப்பது போலவே, சமச்சீரற்ற தன்மை எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்குகிறது. சிலர் அதை மாற்ற தைரியமாய் முயற்சிக்கிறார்கள்.

நாம் நமது வாழ்க்கை குறித்து கேள்விகேட்டு அதனை எளிமையானதாக்கிக் கொள்ளும்போது, அடுத்தவர்களுக்கு திறந்த மனதுடன் உதவ முடியும்.

பொருளாதாரம் சார்ந்த எல்லா வளர்ச்சியுடன் தியாகமும் உதவும் குணமும் ஒன்றுக்கொன்று உடன்பட்டுச் செல்லவேண்டும். சிலர் நீதியினிமித்தம் தமது வருவாயில் ஒரு பகுதியை செலவிடுகிறார்கள்.

நமது நேரத்தை செலவிடுவது சாலச்சிறந்தது. நாம் ஒவ்வொருவரும் தலா ஒருவருக்கு செவிமடுக்கவும் உதவவும் முயலலாம். அப்படி உதவி பெறுபவர் ஒரு கைவிடப்பட்ட குழந்தையாகவோ, வேலையும் நம்பிக்கையுமற்ற ஒரு இளைஞனாகவோ, மன நெருக்கடிக்காளான வராகவோ அல்லது முதியவராகவோ இருக்கட்டும்.

அன்பு செய்ய தேர்ந்தெடுப்பது, நம்பிக்கையை தேர்ந்தெடுப்பதாகும். தளராத மனதுடன் சாலைவழி செல்கையில் கடவுள் நம்மை தேர்ந்து கொண்டுள்ளார் என்பதை ஆச்சரியத்தோடு உணர முடியும். “பயப்படாதே, உன்னை பெயர் சொல்லி அழைத்தேன், நீ எனக்கு சொந்தமானவன், நான் உன் கடவுள், நீ எனக்கு விலைமதிப்பற்றவன் மேலும் நான் உன்னை நேசிக்கிறேன். [II]

நம்மையும், நம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களையும், இறைவனின் நன்மைதனம் நிறைந்த கண்களுக்கு முன் செபத்தில் அர்ப்பனிக்கிறோம். நம்மை நமது அனைத்து குணநலன்களுடன் இறைவன் வரவேற்கிறார், நமது உள் முரண்பாடுகள் மற்றும் நமது தவறுகளுடன் அவர் ஏற்றுகொள்கிறார். நமது பலவீனங்கள், நமது வாழ்வில் தூய ஆவி நுழையும் வாசலாக மாறும் என நற்செய்தி உறுதி அளிக்கிறது.

முற்பது ஆண்டுகளுக்கு முன்பு சகோ. ரோஜர் கல்கத்தாவிலிருந்து எழுதினர்;. “அன்பின் கருவூலம் செபம். ஊடல் மற்றும் ஆன்மாவை ஒடுக்கி நம்மை ஒறுத்து செய்வது. உயிர் பெற்ற ஆண்டவரை முகமுகமாய் தரிசிக்க, தினம்தோறும் மறைநூலின் சிலவரிகளில் ஆழ்வோம். அமைதியியல், வாழும் வார்த்தையான கிறிஸ்து உங்களில் பிறப்பார், அவரை வாழ்வுக்கு எடுத்துச் செல்லுங்கள்”.

கொல்கொத்தாவைவிட்டு செல்லும் போது, அவர்மேலும் கூறியது:

இதயத்தில் ஆழமான துன்பத்தின் நடுவே, வளமையை வியக்கும் மக்களின், எல்லோருக்கும் வெவ்வேறு எதிர்காலத்தை கண்டு, எதிர்கொள்ளுடும் நிலையை மீண்டும் கண்டு பிடித்தப் பின் இந்த கரத்தை விட்டு வெளியே செல்லுகிறோம், எதிர்கால பங்களிப்புக்கு இறைவனின் மக்கள் சொந்தமாக ஒரு ஆக்கபூர்வ நிலையை கொண்டிருக்கின்றனர் உலகம் முழுவதும் பரவியதால், மனித குடும்பத்தின் பகிர்வுகளை கட்டி எழுப்பி உள்ளது. அதுவே, முழுமையான பரவுதலுக்கான, போதுமான வலிமையுடையாக இருந்து, அசையாத கட்டமைப்புகளை ஆட்டுவித்து, மனித குடும்பத்தில் உறவை உருவாக்கின்றது. [III]

இன்றைய வாழ்விற்கு சகோதரர் ரோஜர் அறைக்கூவல் பொருத்தமாயிக்கிறது. இந்த ஆச்சரியமான செய்தியில் இவர் பிடித்திருப்பதில் மூலம், உலகமெல்லாம் பரவியிருக்கும் கிறிஸ்த்துவர்கள் நம்பிக்கையால் நீடித்து வாழந்;திருக்கின்றனர். கிறுஸ்துவின் உயிர்ப்புக்கு பின், நமது மனித குலம் சிதறுண்டு போவதில்லை.

நமக்குள் வேறுபாடுகளை அனுமதித்துக் கொண்டு எப்படி நாம் பூமியின் மீது கடவுளின் சாட்சிகளாயிருக்க முடியும்? காணக் கூடியதான ஒருமைப்பாட்டுக்கு முன்னேறுவோம். ஒன்றிணைந்து கிறிஸ்துவிடம் வரும்போதும், செபத்தில் ஒருங்கிணையும்போதும் தூயஆவி நம்மை இணைக்கிறார். தாழ்மையுள்ள செபத்தில் தொடர்ந்து ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க கற்கிறோம்.

ஒருவருக்குகொருவர் காட்டும் நல் உபசரிப்பின் மூலம் தான், அன்பை பரிமாறிப்கொள்கிறோம். நற்செய்தியை அறிவிக்க இந்த அன்பு தான் தேவையாக உள்ளது. கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர்கள், எல்லோருக்கும் ஒற்றுமை அளிக்க அழைக்கப்பட்டிருகின்றனர். இறைவனின் புகழ்ச்சி எங்கும் பரவுகிறது.

அருமையான நற்செய்தி உவமை வாழ்க்கைக்கு பொருத்தமானதாக உள்ளது. கருவிதை மிகப் பெரிய மரம் மற்றும் தோட்டமாகி, பறவைகள் தங்கி கூடு கட்டி வாழ இடமளிக்கின்றது. [IV] கிறிஸ்த்துவில் ஆழமாக நாம் வேர்விட்டிருப்பதால், எப்போதும் திறந்த மனம் காட்டும் திறனை மீண்டும் கண்டு பிடிக்கிறோம். அவரை நம்பாதவர்களுக்கும், வேறுபட்டிருப்பவர்களுக்கும் கூட திறந்த மனதுள்ளவராக இருக்கும், கிறிஸ்து அனைவருக்கும் பணியாளராக இருக்கிறார். அவர் எவரையும் தாழ்த்துவதில்லை.

கிறிஸ்துவோடும், நற்செய்தியோடும் நெருங்கும்போது நம்மில் ஒருவர் மற்றவருடன் நெருக்கமாகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசங்களின் எல்லைகளை கடந்து ஒன்றுபட்டு நாம் வாழ்கிறோம். கடவுள் தமது மூச்சையும், ஆவியையும் தருகிறார். “ அமைதியின் பாதையில் நடக்க வழிநடத்தும்” என ஜெபிப்போம். [V]


1. போப் பெனடிக்ட் XVI தமது மறைபணியின் துவக்கத்தில் எழுதினார் “எல்லா மக்களும் ஒன்றாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (உலக அமைதி நாள் செய்தி, 2006).
கோல்கொத்தாவில் பழமை வாய்ந்த மதங்களை பின்பற்றும் பலர் வாழ்கிறார்கள். சில நேரங்களில் தோன்றும் மதவெறியாட்டங்களில் வன்முறைகள் நடந்தேறுகிறது. பாரம்பரியமிக்க மத மாந்தர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.

2. மத்திய கிழக்கு நாடுகளின் போரின்போது, லெபனானிலிருந்து வந்த இளம் கப்பன் கூறியதாவது. “ இருதயத்தில் அமைதி சாத்தியமே. நீ தாழ்த்தப்படுகையில் பதிலுக்கு தாழ்த்தி அடிமைப்படுத்தும் எண்ணம் எழும். வெறுப்பும், பழ்வாங்கும் எண்ணமும் வளர வளர, அமைதியையும் வளர்கக வேண்டும்.

3. தேய்சேவை சேர்ந்த சில சகோதரர்கள் பங்களாதேஷில் சுமார் 30 ஆண்டுகள், இசுலாமியர் மத்தியப் பணியாற்றினர். தங்கள் அன்றாட வாழ்வை ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோருடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது “சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, வலிமையற்ற மற்றும் பயனற்றவர்கள் மத்தியில் கடவுளின் பிரசன்னத்தை பார்க்கிறோம். மத மற்றும் கலாச்சார வேற்றுமையிலிருக்கும் பங்காதேஷில் எங்கள் பணி ஒடுக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு அiதியின் வழியை காட்டுகிறது.

அன்னை தெரேசாவும் அவரைத் தொடர்ந்து அவர் சபை சகோதரிகளும் இதே பணியைத்தான் தொடர்ந்து செய்கிறார்கள்.

4. சமச்சீரற்ற தன்மை வன்முறைக்கு வழிவகுக்கிறது. வளர்ந்த நாடுகளில் வாழும் 20% மக்கள் உலகின் 80% வளங்களை பயன்படுத்துகிறார்கள். சக்தியையும், தண்ணீரையும் பொறுப்புடன் மேலாண்மை செய்வதே உடனடி தேவை.

5. சகோதரர் ரோஜர்யின் இறுதிச்சடங்கின்போது கிராண்டே கார்டியூஸ் மற்றும் மெர்சிலின் தீயூவ்ஸ் அவர்களால் இப்படி எழுத்ப்பட்டது. “கடவுளார் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களை வெளிச்சத்ததிற்கு கொண்டு வருவதே சகோ. ரோஜர் நமக்கு விட்டுச் செல்லும் பணி”. (பார்க்க 2 கொரிந்தியர் 12:10)

6. நான்காம் நூற்றாண்டில் வாழும் ஒரு கிறிஸ்தவன், ஜெபமும் அர்ப்பணிப்பும் எத்தகைய வரப்பிரசாதமென நமக்கு வெளிப்படுத்துகிறார். “மீட்பரின் உடலை மரியாதை செய்ய விரும்புகிறாயா? இது எனது உடல் என்று சொல்லியவர்தான். நான் பசியாயிருந்தேன் நீ உண்ணத்தரவில்லை. மிகச்சிறிவருள் ஒருவருக்கு செய்ய தவறியபோது என்னையே மறுதலித்தாய் எனவே உனது உடைமைகளை பகரிந்து கிறிஸ்துவை மேன்மைப்படுத்து”. (புனித ஜான் கிறிஸோஸ்டோம்).

7. முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள், மிக குறைந்த எண்ணிக்கையிலிருந்தபோதும் இங்கனம் எண்ணியிரந்தார்கள். “கிறிஸ்து மக்களினங்களுக்கு இடையே இருந்த அவற்றை உடைக்க தனது உயிரை சிலுவையில் ஈந்தார். (எபேசியர் 2:14 – 16)

8. ஆறாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் வாழந்த ஒரு கிறிஸ்தவர் எழுதும்போது, “உலகம் ஒரு வட்டம். இறைவனே அதன் மையம், மக்கள் அதன் பரப்பில் வாழ்கிறவர்கள் கடவுளோடு இருக்க விரும்புவோர் மையம் நோக்கி நகர்வர். அப்போது கடவுளின் மக்களுடனும் நெருங்கியிருப்பர். கடவுளோடு நெருங்க நெருங்க மக்களுடனும் நெருங்குவர். (டோரோதேயுஸ், காஸா, அறிவுரைகள் VI)

9. மற்ற மத்தத்துடன், திருச்சபையின் உறவு இருவிஷயங்களை உள்ளடக்கியது என்று தனது வாழ்க்கiயின் ஆழமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் சகமனிதனை மதிப்பது, இரண்டு. தன்ககுள்ளே ஆவியின் செயல்களுக்கு மதிப்பளிப்பது. எல்லா மனித இருதயத்துள்ளும் இருக்கும் தூய ஆவியே ஒவ்வொரு ஆழமான ஜெபத்தையும் முன்மொழிகிறார். (ஜான்பால் II)

10. இந்த நமது பாதையில், நமக்கு உதவக் கூடியவர்களுள் ஒருவர் டயட்ரிக் போன் ஹோபர். 20ம் நூற்றாண்டின் இருண்ட நேரங்களில், வேத சாட்சியானவர். சிறையில், இறப்புக்கு சிலமாதங்களுக்கு முன்பு அவர் எழுதியவரிகளை தேய்சேவில் இப்போது நாம் பாடுவோம்.
“இறைவா, எனது சிந்தனைகள் உன்னிடம் ஒருங்கிணைவதாக.
உம்முடன் ஒளியிருக்கிறது. நீ ஒருபோதும் என்னனை மறப்பதில்லை
உம்மிடம் உதவியுண்டு. உம்மிடம் பொறுமையுண்டு.
உம்முடைய பாதை எனக்கு புரிவதில்லை.
ஆனால், எனது பாதையை நீர் அறிவீர்”

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 8 மார்ச் 2007

Footnotes

[Iமத்தேயு 25:40.

[IIஇசையாஸ் 43:1-4

[IIIசகோ. ரோஜர், கடவுளின் மக்களுக்கு கடிதம், 1976.

[IVலூக்கா 13:18-21.

[Vலூக்கா 1:79.